ஆதர்ஷ் வழக்கு: அசோக் சவான் பெயரை நீக்க கோர்ட் மறுப்பு
மும்பை: ஆதர்ஷ் குடியிருப்புகளை ஒதுக்கியதில் நடந்த முறைகேடுகள் குறித்த வழக்கில் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான் பெயரை நீக்கக் கோரிய சிபிஐ மனுவை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மும்பை ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் தொடர்பாக, மகாராஷ்டிர அரசால் நியமிக்கப்பட்ட விசாரணை கமிஷன் அறிக்கை மற்றும் அதன் மீது அரசின் நடவடிக்கை அறிக்கை ஆகியவை அம்மாநில சட்டமன்றத்தில் கடந்த டிசம்பர் இறுதியில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விசாரணையை மும்பை உயர் நீதிமன்றம் கண்காணித்து வருகிறது. மேலும் மாநில அரசு சார்பில் கடந்த 2011 ஜனவரியில் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜே.ஏ.பாட்டீல் தலைமையில் இருநபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
இதனிடையே சிபிஐ குற்றப்பத்திரிகையில் முன்னாள் முதல்வர் அசோக் சவான் பெயர் இடம்பெற்றுள்ள நிலையில், அவர் மீது வழக்குப் பதிவு செய்ய ஆளுநர் சங்கரநாராயணன் அனுமதி மறுத்தார். இதனையடுத்து சிபிஐ தரப்பில் இருந்து சவான் பெயரை குற்றப்பத்திரிகையில் இருந்து நீக்க அனுமதி கோரப்பட்டது.
இந்த மனுவை இன்று மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்ததோடு, சவான் மீது வழக்கு பதிவு செய்ய ஆளுநர் அனுமதி மறுத்திருந்தாலும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு விசாரணை நடத்த முடியும் என யோசனை தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications