ஷீனா போரா கொலை வழக்கை டேக் ஓவர் செய்த சிபிஐ: விசாரிக்கும் 2 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள்
மும்பை: ஷீனா போரா கொலை வழக்கை மும்பை போலீசாரிடம் இருந்து சிபிஐ தன் வசமாக்கியுள்ளது. வழக்கை இரண்டு பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர்.
ஸ்டார் இந்தியா நிறுவன முன்னாள் சிஇஓ பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி தனது மகள் ஷீனா போராவை கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி கழுத்தை நெறித்து கொலை செய்து உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டார். இந்த வழக்கில் மூன்று ஆண்டுகள் கழித்து தற்போது தான் இந்திராணி, அவரது முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா மற்றும் முன்னாள் டிரைவர் ராய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை மும்பை போலீசார் விசாரணை செய்து வந்தனர். வழக்கை விசாரித்து வந்த மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியாவுக்கு திடீர் என பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஷீனா வழக்கை சிபிஐக்கு மாற்ற மகாராஷ்டிரா மாநில அரசு முடிவு செய்தது. இதையடுத்து சிபிஐ செவ்வாய்க்கிழமை ஷீனா வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
சிபிஐ அதிகாரிகள் இந்திராணி முகர்ஜி, சஞ்சீவ் கன்னா மற்றும் ராய் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்திராணி ஷீனாவுக்கு விஷம் கொடுத்ததாகக் கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மும்பை போலீஸ் விசாரணையில் விஷம் விஷயம் வெளியே வரவில்லை.
ஷீனா வழக்கை ராஜஸ்தானைச் சேர்ந்த லதா மனோஜ் குமார், நினா சிங் ஆகிய பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications