Mamata vs CBI: அடுத்த திருப்பம்.. சிபிஐக்கு மேற்கு வங்க போலீஸ் சம்மன்.. சரமாரி கேள்வி!
கொல்கத்தா கமிஷனரை கைது செய்ய சென்றது ஏன்? என்று சிபிஐக்கு மேற்கு வங்க போலீஸ் சம்மன் அனுப்பி இருக்கிறது.
கொல்கத்தா: கொல்கத்தா கமிஷனரை கைது செய்ய சென்றது ஏன்? என்று சிபிஐக்கு மேற்கு வங்க போலீஸ் சம்மன் அனுப்பி இருக்கிறது.
தி ரோஸ் வேலி ஊழல் மற்றும் சாரதா ஊழல் ஆகிய ஊழல்கள் காரணம் தற்போது மேற்கு வங்கம் பெரிய பரபரப்பிற்கு உள்ளாகி இருக்கிறது. இந்த ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இதில் கொல்கத்தா கமிஷ்னர் ராஜீவ் குமாரை குற்றம்சாட்டி சிபிஐ நேற்று அவரை கைது செய்ய முயன்றது. நேற்று இதற்காக அவரது வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சென்று இருந்தனர்.
ஆனால் இந்த கைதை தடுக்கும் வகையில் கொல்கத்தா போலீஸ் சிபிஐ அதிகாரிகளை கைது செய்தது. அதன்பின் அந்த சிபிஐ அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர்.
ஆனால் இது மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை கோவத்திற்கு உள்ளாக்கி உள்ளது. கொல்கத்தாவில் மமதா பானர்ஜி இது தொடர்பாக தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.நேற்று இரவில் இருந்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.
இது தொடர்பாக மாநில அரசுக்கும் , போலீசுக்கும் எதிராக சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. இதற்கு மத்தியில் தற்போது திடீர் திருப்பமாக சிபிஐக்கு மேற்கு வங்க போலீஸ் சம்மன் அனுப்பி இருக்கிறது.
கொல்கத்தா கமிஷனரை கைது செய்ய சென்றது ஏன்? சிகரெட் ஆபரேஷன் என்ற பெயரில் கமிஷனர் வீட்டை நோக்கி சிபிஐ அதிகாரிகள் சென்றது ஏன்?.
அரசுக்கு இதுகுறித்து அறிவிப்பு வெளியிடாததன் காரணம் என்ன? அரசின் அனுமதி இன்றி கமிஷனரை விசாரிக்க சென்றது ஏன்? என்று மேற்கு வங்க போலீஸ் தனது சம்மனில் கேள்வி எழுப்பி இருக்கிறது. மேற்கு வங்க சிபிஐ இணை இயக்குனர் பங்கஜ் ஸ்ரீவஸ்தவாவிற்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
-
சேலை குவியலுக்குள் புகுந்த திரிணாமுல் தலைவர்.. தட்டி தூக்கிய போலீஸ்.. அரங்கேறிய விசித்திர டிராமா! -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications