சுமூகமாக சட்டசபை தேர்தல்: 5 மாநில கட்சிகளின் தலைவர்களுடன் டெல்லியில் நாளை மறுநாள் நசீம் ஜைதி ஆலோசனை
டெல்லி: சட்டசபை தேர்தல்களை சுமூகமாக நடத்துவது குறித்து 5 மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் டெல்லியில் நாளை மறுநாள் தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்களில் வேட்புமனுத் தாக்கல் தொடங்கிவிட்டது.

இதில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மே 19-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.
வாக்கு சாவடிகளுக்கு பாதுகாப்பு, பிரசார ஒழுங்குகள், தேர்தல் நடத்தை விதிமீறல்கள் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளில் தேர்தல் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வரும் 19-ந் தேதியன்று டெல்லியில் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களின் அரசியல் கட்சித் தலைவர்களை தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி சந்தித்து பேச உள்ளார்.
தமிழகத்தில் இருந்து அதிமுக, திமுக, இடதுசாரிகள் உள்ளிட கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இக்கூட்டத்தில் சட்டசபை தேர்தல்களை சுமூகமாக நடத்துவது குறித்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளை நசீம் ஜைதி கேட்க இருக்கிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications