For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திப்பு சுல்தான், ஒரு அவுரங்க சீப்.. பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு மோகன்தாஸ் பை எதிர்ப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: அவுரங்கசீப் பிறந்த நாளை கொண்டாடுவதும், திப்பு சுல்தான் பிறந்த நாளை கொண்டாடுவதும் ஒன்றுதான் என்று பத்ம ஸ்ரீ விருது பெற்ற பிரபல தொழிலதிபர் மோகன்தாஸ் பை தெரிவித்துள்ளார்.

கர்நாடக அரசு திப்பு சுல்தான் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடுவதற்கு பாஜக, ஆர்எஸ்எஸ், கிறிஸ்தவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருப்பினும் வரும் 10ம் தேதி விழாவை கொண்டாட அரசு ஆயத்தமாகிவருகிறது.

Celebrating Tipu Jayanti is like celebrating Aurangzeb's: Pai

இந்நிலையில் கர்நாடகாவை சேர்ந்தவும், பிரபல தொழிலதிபருமான மோகன்தாஸ் பை கூறுகையில், அவுரங்கசீப் ஒரு மத அடிப்படைவாதி. திப்பு சுல்தான் பிறந்த நாளை கொண்டாடுவது என்பது மத்திய அரசு அவுரங்கசீப் பிறந்த நாளை கொண்டாடுவதை போலவாகும். கர்நாடக அரசு இந்த விஷயத்தில் அரசியல் செய்கிறது. மைசூர் அரசரான உடையார், மைசூர் திவான் மிஸ்ரா இஸ்மாயில் போன்றோர் பிறந்த நாளை கொண்டாடட்டுமே. அதைவிடுத்து அரசியல் செய்வது சரியில்லை.

கோயில்கள், தேவாலயங்கள், கொங்கணி வழிபாட்டு தலங்களை இடித்தவர் திப்பு சுல்தான். இப்படி எல்லோருடைய கோபத்திற்கும் ஆளாகியுள்ளவரின் பிறந்த நாளை பிடிவாதமாக கொண்டாட அவசியமில்லை. இவ்வாறு மோகன்தாஸ் பை தெரிவித்தார்.

English summary
Technology investor and Padma Shri awardee T V Mohandas Pai today said the Karnataka government's plan to celebrate 'Tipu Jayanti' is like celebrating the anniversary of Aurangzeb, "who was a tyrant Mughal Emperor and a staunch religious fundamentalist." "The state government's plan to celebrate Tipu Jayanti is like the central government celebrating the anniversary of Aurangzeb, who was a tyrant Mughal Emperor and a staunch religious fundamentalist," he told reporters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X