For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்.. அடுத்த ஆண்டு முதல் 8-ம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்' திட்டம் ரத்து!

அடுத்த கல்வி ஆண்டு முதல் 8 ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Google Oneindia Tamil News

அகர்தலா: அடுத்த கல்வி ஆண்டு முதல் 8 ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆல் பாஸ் திட்டத்தால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக மாநில அரசுகள் முறையிட்டதை தொடர்ந்து மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

கல்வி உரிமைச்சட்டம் - 2009 படி 8 ஆம் வகுப்பு வரை எந்த மாணவ, மாணவியை பெயில் ஆக்கக்கூடாது. இதனால் நாடு முழுவதும் 8ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவ மாணவிகள் கட்டாய தேர்ச்சி செய்யப்பட்டு வருகின்றனர்.

Central government has decided to cancel the compulsory passing procedure from the next academic year

இந்நிலையில் வரும் கல்வி ஆண்டு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே தெரிவித்துள்ளார்.

திரிபுரா மாநிலம் அகர்தலாவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மத்திய அரசின் கட்டாய தேர்ச்சி திட்டத்தால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக மாநில அரசுகள் குற்றம்சாட்டி வருவதாக அவர் கூறினார்.

இதனை முன்னிட்ட கல்வி உரிமை சட்டத்தில் இருந்து, அடுத்த கல்வி ஆண்டு முதல் ஆல் பாஸ் திட்டத்தை வாபஸ் பெறுவது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். மத்திய அரசின் இந்த முடிவால் அடுத்த ஆண்டு முதல் 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்படுகிறது.

English summary
The central government has decided to cancel the compulsory passing procedure from the next academic year to the 8th std. The Central Government has taken this decision after the state governments have complained that education is affected by the All Pass program.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X