For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் மேலும் 3 தேசிய நெடுஞ்சாலைகளை அறிவித்தது மத்திய அரசு!

தமிழகத்தில் மேலும் மூன்று தேசிய நெடுஞ்சாலைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தில் மேலும் 3 தேசிய நெடுஞ்சாலைகளை அறிவித்தது மத்திய அரசு

    டெல்லி: தமிழகத்தில் மேலும் மூன்று தேசிய நெடுஞ்சாலைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்படுகின்றன. இந்தச் சாலைகளில் பெரும்பாலானவை இரு வழிப்பாதைகள் ஆகும்.

    66,590 கிமீ தொலைவு சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக இருக்கின்றன. இந்தியாவிலேயே மிக நீளமான தொலைவைக் கொண்ட தேசிய நெடுஞ்சாலையாக தேசிய நெடுஞ்சாலை எண் 7 (NH7) உள்ளது.

    உபி முதல் குமரி வரை

    உபி முதல் குமரி வரை

    இதன் நீளம் 2369 கிலோ மீட்டர் ஆகும். இது இந்தியாவின் வடக்கே உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் தொடங்கி தெற்கே தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரியுடன் இணைகிறது.

    40% போக்குவரத்து

    40% போக்குவரத்து

    மொத்தச் சாலைக் கட்டமைப்பில் தேசிய நெடுஞ்சாலைகளின் பங்கு 2 சதவீதமாகும். ஆனால் அவை நாடு முழுவதும் 40 சதவீத போக்குவரத்தை கையாளுகின்றன.

    தமிழகத்தில் புதிய நெடுஞ்சாலைகள்

    தமிழகத்தில் புதிய நெடுஞ்சாலைகள்

    இந்நிலையில் மத்திய அரசு தமிழகத்தில் மேலும் மூன்று புதிய தேசிய நெடுஞ்சாலைகளை அறிவித்துள்ளது. அதன்படி மேச்சேரி, மேட்டூர், சித்தர்பவானி வழியாக ஈரோடு சாலையில் இணையும் சாலை தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இணைப்பு சாலைகள்

    இணைப்பு சாலைகள்

    இதேபோல் அயோத்தியாபட்டினம், ஊத்தங்கரை, திருப்பத்தூர் வழியாக வாணியம்பாடி வரை உள்ள சாலை 2வது தேசிய நெடுஞ்சாலையாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தஞ்சை, குன்னம் வழியாக ஆத்தூர் நெடுஞ்சாலையுடன் இணையும் சாலை 3வது தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Central govt has announced 3 National highways in Tamilnadu. Those are Salem district to Erode joining road. In Vellore district thirupathur to Vaniyampadi road has been announced as national highway. and one more is Tanjavur district joining road.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X