ஓகி புயல் பாதிப்பை பார்வையிட மத்தியக்குழு 26ம் தேதி தமிழகம் வருகிறது!
ஓகி புயல் பாதிப்பை பார்வையிடுவதற்காக மத்தியக்குழு டிசம்பர் 26ம் தேதி தமிழகம் வருகிறது.
டெல்லி: ஓகி புயல் பாதிப்பை பார்வையிடுவதற்காக மத்தியக்குழு டிசம்பர் 26ம் தேதி தமிழகம் வருகிறது. குமரி உள்ளிட்ட புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை இந்த குழு பார்வையிடும்.
ஓகி பாதிப்பு பற்றி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தமிழக அரசு சார்பில் அறிக்கை சமர்பிக்க சென்ற தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்து இருக்கிறார். அதில் "தமிழ்நாட்டின் தற்காலிக சீரமைப்புக்காக ரூ.401 கோடி தர வேண்டும்'' என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து இருப்பதாக கூறியுள்ளார்.

அவர் தனது பேட்டியில் " புயல் பாதிப்புகளை நிரந்தரமாக சீரமைக்க ரூ.8,426 கோடி நிதியுதவி கோரப்பட்டுள்ளது. ஓகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டு இருக்கிறது'' என்று கூறினார்.
மேலும் ''புயல் பாதிப்பு, மழை பாதிப்பைச் சீர்செய்ய நிதி அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரியுள்ளோம்'' என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
முன்னதாக தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி. உதயகுமார் ஓகி புயல் சேதம் பற்றிய அறிக்கையை ராஜ்நாத் சிங்கிடம் அளித்தனர். இதில் விவசாய நிலங்கள், மின் கட்டமைப்பு , மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை அறிக்கையாக அளித்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications