டெல்லி சட்டசபையைக் கலைக்கக் கோரும் வழக்கு: அக்.10-க்கு விசாரணை ஒத்திவைப்பு!
டெல்லி: டெல்லி மாநில சட்டசபையைக் கோரி ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் தொடர்ந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 10-ந் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
டெல்லியில் சிறிது காலம் மட்டுமே ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வராக பதவி வகித்தார். பின்னர் அவரது அரசு ராஜினாமா செய்தது.

இதனால் டெல்லி சட்டசபை தொடர்ந்து முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கவும் முயற்சித்து வருகிறது.
இதனைத் தடுக்கும் வகையில் டெல்லி சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை நடத்தக் கோரி ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது டெல்லி சட்டசபை குறித்து முடிவெடுக்க 4 வார அவகாசம் கோரியது மத்திய அரசு தரப்பு. இதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 10-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.












Click it and Unblock the Notifications