For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூபாய் நோட்டு கள நிலவரம் அறிய 27 குழுக்கள் அமைத்து மோடி உத்தரவு

ரூபாய் நோட்டு விவகாரம்த்தில் நாட்டின் களநிலவரம் என்ன என்பதை அறிய 27 குழுக்களை மோடி அமைத்துள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ரூபாய் நோட்டு தொடர்பாக நாட்டின் களநிலமை என்ன என்பதை அறிய 27 குழுக்களை அமைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ந் தேதி அறிவித்தது முதல் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நாடு முழுவதும் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றமே, இதை நிலைமை நீடித்தால் கலவரம் உருவாகும் என எச்சரித்துள்ளது.

Centre setup teams to know ground situation after demonetisation

மேலும் நவம்பர் 8-ந் தேதிக்கு பின்னர் பணமாற்றம் உள்ளிட்ட சம்பவங்களில் இதுவரை 55 பேர் பலியாகி உள்ளனர். இது தொடர் கதையாகி வருகிறது.

வங்கிக் கணக்கில் உள்ள சொந்த பணத்தை இந்த நாட்டு மக்கள் எடுக்க முடியாமல் செலவுக்கும் பணமில்லாமல் தத்தளித்து வரும் பேரவலம் நீடித்து வருகிறது. இதனிடையே ரூபாய் நோட்டு விவகாரத்தில் நாட்டின் களநிலவரம் குறித்து அறிய 27 குழுக்களை அமைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

இக்குழுக்களின் தலைவர்களாக மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் இருப்பர். இக்குழு நாடு முழுவதும் பயணித்து நிலவரம் என்ன என்பது தொடர்பாக அறிக்கைகளைத் தாக்கல் செய்யும்.

English summary
Prime Minsiter Narendra Modi today setup 27 teams for the inspect of ground situation across the India after the announcement of Demonetisation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X