மத்திய அரசின் அதிதீவிர கண்காணிப்பில் "சின்ன சின்னம்மா" உட்பட மன்னார்குடி கோஷ்டியின் 6 பேர்!
தமிழக அரசின் நடவடிக்கைகளில் மன்னார்குடி கோஷ்டி தலையிடுகிறதா? என்பதை மத்திய அரசு அதிதீவிரமாக கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.
டெல்லி: மத்திய அரசின் அதிதீவிர கண்காணிப்பில் 'சின்ன சின்னம்மா' என அழைக்கப்படும் இளவரசி உட்பட மன்னார்குடி கோஷ்டியின் 6 பேர் இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவையும் ஆட்சியையும் கைப்பற்ற சசிகலா தலைமையிலான மன்னார்குடி கோஷ்டி முயற்சித்தது. ஆனால் தொடக்கம் முதலே மன்னார்குடி கோஷ்டியின் கை ஓங்குவதை தடுத்து வருகிறது மத்திய அரசு.

முதல்வராக மன்னார்குடி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை கொண்டுவர முதலில் முயற்சித்தார் சசிகலா. பின்னர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க மன்னார்குடி கோஷ்டி முயற்சித்தது. இதை மத்திய அரசு தடுத்து ஓ. பன்னீர்செல்வத்தையே முதல்வராக்கியது.
தற்போதும் அதிமுகவையும் ஆட்சியையும் எப்படியாவது கபளீகரம் செய்வது என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது மன்னார்குடி கோஷ்டி. ஆனால் அப்படி எந்த ஒரு அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு அதிதீவிரமாக இருந்து வருகிறது.
குறிப்பாக தமிழக அரசின் நடவடிக்கைகளில் மன்னார்குடி கோஷ்டியின் தலையீட்டை தடுத்து நிறுத்துவதில் மத்திய அரசு முனைப்பாக இருக்கிறது. தற்போது மன்னார்குடி கோஷ்டியின் எம். நடராஜன், திவாகரன், டிடிவி தினகரன், வெங்கடேஷ், சிவகுமார் மற்றும் சின்ன சின்னம்மா என அழைக்கப்படும் இளவரசி ஆகியோர் மத்திய அரசின் அதிதீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு இவர்கள் ஏதேனும் உத்தரவுகளை பிறப்பித்து அரசின் நடவடிக்கைகளில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்களா? என தீவிரமாக மத்திய அரசு கண்காணித்து வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications