"வழுக்கி"க் கொண்டு ஓடிய "ஜட்டி, பனியன்" திருடர்களை மடக்கிப் பிடித்த மும்பை போலீஸ்!
மும்பை: ஜட்டி, பனியன் அணிந்து கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த 4 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.
மும்பை நகரின் போரிவிலி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட குடியிருப்புப் பகுதியில் வசித்துவரும் வயதான தம்பதியை கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு கும்பல் திடீரென தாக்கிவிட்டு, அவர்கள் வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது.

இவர்கள் தப்பிச் செல்லும்போது, ரோந்தில் இருந்த போலீசார் அவர்கள் மீது சந்தேகம் அடைந்து விரட்டினர். கொள்ளையர்கள், போலீசார் மீது தாக்குதல் நடத்த தொடங்கினர். இதில் ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் 2 போலீசார் காயம் அடைந்தனர். போலீசாரும் பதிலுக்கு அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த மோதலுக்கு பிறகு, கொள்ளையர்களில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். இன்னும் சிலர் தப்பியோடிவிட்டனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் 4 பேரும் காயம் அடைந்ததால், அவர்கள் காந்திவிலியில் உள்ள சதாப்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
கைதான கொள்ளையர்கள் விரார்-வாசி, டோம்பிவிலி, கல்யாண் ஆகிய இடங்களில் கடந்த சில மாதங்களாக கொள்ளைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
ஜட்டி, பனியன் மட்டுமே அணிந்து உடம்பு முழுவதும் எண்ணெய் பூசி கொள்ளைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை யாராவது பிடித்தாலும் கையில் சிக்காத வகையில் தப்புவதற்காக உடம்பில் எண்ணெய் பூசி இந்த தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications