சைலண்ட் ஆன கேசிஆர்.. நாளை பிரதமர் மோடியை வரவேற்க செல்வாரா? பெரிய ‘சஸ்பென்ஸ்’.. பரபர அரசியல் பின்னணி!
ஹைதராபாத் : தெலுங்கானாவிற்கு நாளை வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியை, அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் வரவேற்கச் செல்வாரா இல்லையா என்பதில் சஸ்பென்ஸ் நிலவுகிறது. கிட்டத்தட்ட கடந்த 2 ஆண்டுகளாக பிரதமரை சந்திப்பதை தவிர்த்து வரும் கேசிஆஅர் இந்த முறை என்ன செய்யப் போகிறார் என்பதை அரசியல் வட்டாரங்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
பிரதமர் மோடி நாளை தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் நெடுஞ்சாலைகள் மற்றும் ரெயில்வே வேகன் உற்பத்தி பிரிவு உள்பட ரூ.61,00 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் மோடியின் இந்த நிகழ்ச்சிக்கு அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவுக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்நிகழ்ச்சியில் கேசிஆர் கலந்துக் கொள்ள மாட்டார் என்றும், பிரதமர் மோடியை வரவேற்கச் செல்லமாட்டார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

புறக்கணிக்கும் கேசிஆர்: பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகளை கேசிஆர் புறக்கணிப்பது இது முதல் முறையல்ல. மத்திய பாஜக அரசை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், பிரதமர் அரசு முறைப் பயணமாக தெலுங்கானா வரும்போதும் புறக்கணித்து வருகிறார். கடந்த 14 மாத காலத்தில் மட்டும் பிரதமர் நரேந்திர மோடி 5 முறை தெலுங்கானாவுக்குச் சென்றுள்ளார்.
ஆனால், ஒரு முறை கூட பிரதமர் நரேந்திர மோடியை, சந்திர சேகர் ராவ் வரவேற்க நேரில் செல்லவில்லை. கடைசியாக கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி ஹைதராபாத்திற்குச் சென்று 11,355 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. அப்போதும், முதல்வர் சந்திர சேகர் ராவ் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விஸ்ட் நடக்குமா?: கடைசியாக 2021 செப்டம்பரில் டெல்லியில் கே.சி.ஆர் பிரதமர் மோடியை சந்தித்தார். அக்டோபர் 21-ஆம் தேதி ஹுசூராபாத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பி.ஆர்.எஸ் தோல்வியடைந்த பிறகு, பாஜகவுக்கு எதிராக அவர் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். அதைத்தொடர்ந்தே பிரதமர் மோடியின் தெலுங்கானா வருகையின்போதெல்லாம் சந்திப்பை புறக்கணித்தார்.
இருப்பினும், சமீப காலமாக, கேசிஆர் பாஜகவிடம் மென்மையான நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகிறார். மேலும் காங்கிரஸைத் தாக்குவதில் அதிக கவனம் செலுத்துகிறார். அதே நேரத்தில், டெல்லி மதுக் கொள்கை ஊழலில் கே.சி.ஆரின் மகள் கவிதாவின் பங்கு குறித்து அமலாக்கத்துறை தேசியத் தலைமையுடன் கே.சி.ஆர் ஏதாவது புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருக்கலாம் என்றும், வாரங்கலில் நடைபெறும் பிரதமரின் நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்ளலாம் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
பாஜக விமர்சனம்: எனினும், இந்த முறை, ஹக்கிம்பேட் விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்பதற்கும், வழியனுப்புவதற்கும் கேசிஆர் செல்வாரா அல்லது தனது அமைச்சர் யாரையாவது அனுப்பி வைப்பாரா என்பது குறித்து இதுவரை முதல்வர் அலுவலகத்திலிருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை.
இதுகுறித்து முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், பாஜக தலைவருமான ராம்சந்தர் ராவ் கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடி 14 மாதங்களில் 5 முறை தெலுங்கானா வந்துள்ளார். ஆனால், தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் ஒரு முறை கூட அவரை வரவேற்க வந்ததில்லை. தெலுங்கானா முதல்வர் அந்தஸ்துக்கு ஏற்ப நடந்து கொள்வதில்லை. மாநிலத்தின் நெறிமுறைகளைப் பின்பற்றுவதில்லை.
கேரளா முதல்வர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் போன்ற முதல்வர்களும் அரசியல் ரீதியாகவும், சித்தாந்த ரீதியாகவும் எதிர்க்கொள்கிறார்கள். அவர்கள் இருவரும் பணிவுடன் உள்ளனர். பாஜகவை அரசியல் ரீதியாக எதிர்த்தாலும், நெறிமுறையின்படி பிரதமர் மோடியை வரவேற்கின்றனர்.

என்ன நடக்கப்போகுதோ?: முன்பு ராஜீவ் காந்திக்கும், என்டிஆருக்கும் இடையே கசப்பான அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தும், என்.டி.ராமாராவ் ராஜீவ் காந்தியை வரவேற்க வந்தார். ஜனநாயகத்திற்குத் தேவையான அரசியல் கலாச்சாரம் அதுதான். இன்று முதல்வரின் நடத்தை வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது. தெலுங்கானா மக்கள் முதல்வர் கே.சி.ஆரால் அவமதிக்கப்படுகிறார்கள். தெலுங்கானா மக்கள் அவருக்கு பாடம் புகட்டுவார்கள்" என்றார்.
தெலுங்கானாவில் அரசியல் களத்தில் பாஜகவுடன் கேசிஆரின் பாரதிய ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) மோதலில் ஈடுபட்டுள்ளது. அங்கு இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மறுபுறம், கேசிஆர், தனது கட்சியை தேசிய கட்சியாக வளர்த்தெடுக்கும் லட்சியத்தோடு, மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்த முயற்சிக்கிறார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார் கேசிஆர்.
-
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications