சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தும் சந்திரபாபு நாயுடு! ஜெகன் மோகன் ரெட்டி அரசுக்கு கடும் கண்டனம்
டெல்லி: மகாத்மா காந்தியின் 155வது பிறந்த நாளான இன்று டெல்லியில் அவரது நினைவிடத்தில் மலர் தூவி பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார். பின்னர் இது தொடர்பாக தனது சோஷியல் மீடியா பக்கத்தில் "காந்தியின் கனவுகளை நனவாக்க நாம் எப்போதும் உழைப்போம்" என்று கூறியுள்ளார்.
காந்தி ஜெயந்தியான இன்று டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார். பின்னர் தனது x சோஷியல் மீடியா பக்கத்தில் "காந்தியின் கனவுகளை நனவாக்க நாம் எப்போதும் உழைப்போம்" என்று கூறியுள்ளார். முன்னதாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மை இயக்கத்திற்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

அதாவது, "அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. தூய்மையை வலியுறுத்தி காந்தியடிகளுக்கு நாம் தூய்மை இயக்கத்தின் மூலம் அஞ்சலி செலுத்த வேண்டும். இதன்படி அக்டோபர் 1-ம் தேதி காலை 10 மணிக்கு நாடு முழுவதும் மாபெரும் தூய்மை இயக்கம் நடத்தப்படும். இதில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்" என்று வலியுறுத்தியிருந்தார். அதன்படி ஹரியான மாநிலத்தை சேர்ந்த அங்கித் எனும் உடற்பயிற்சி ஆர்வலர் மற்றும் மல்யுத்த வீரருடன் சேர்ந்து நேற்று தூய்மை பணியை மேற்கொண்டிருந்தார்.
இதனையடுத்து இன்று காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் தனது x சோஷியல் மீடியாக பக்கத்தில் "மகாத்மா காந்திக்கு தலைவணங்குகிறேன். காந்தியின் காலத்தால் அழியாத போதனைகள் நம் பாதையில் தொடர்ந்து ஒளிர்கின்றன. மகாத்மா காந்தியின் தாக்கம் உலகளாவியது, அது ஒட்டுமொத்த மனித குலத்தையும் ஒற்றுமை, இரக்க உணர்வை மேலும் வளர்க்க தூண்டுகிறது. காந்தியின் கனவுகளை நனவாக்க நாம் எப்போதும் உழைப்போம் - பிரதமர் நரேந்திர மோடி. இளைஞர்களுக்கு ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வளர்க்கும் வகையில் அவரது எண்ணங்கள் உதவட்டும்" என்று கூறியுள்ளார்.
இவரைத்தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் இதர காங்கிரஸ் தலைவர்கள் காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications