பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட எழுத்தாளர் சந்திரசேகர் ரத் மரணம்
பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட எழுத்தாளர் சந்திரசேகர் ரத் காலமானார்.
புவனேஸ்வர்: பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட எழுத்தாளர் சந்திரசேகர் ரத் காலமானார். அவருக்கு வயது 89.
ஒடிசா இலக்கிய எழுத்தாளர் சந்திரசேகர் ரத் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.
89 வயதான சந்திரசேகர் ரத்திற்கு மனைவி, மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் ஆகியோர் உள்ளனர்.

உயிர் பிரிந்தது
இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். 1929ஆம் ஆண்டு பலாங்கிர் மாவட்டத்தில் உள்ள மலப்படா கிராமத்தில் அக்டோபர் 17ஆம் தேதி பிறந்தார் சந்திரசேகர் ரத்.

பத்மஸ்ரீ விருது அறிவிப்பு
அவருக்கு மத்திய அரசு இந்தாண்டுக்கான பத்மஸ்ரீ விருதை அண்மையில் அறிவித்தது. மறைந்த ரத் தனது இலக்கிய படைப்புகளுக்காக ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். கேந்த்ர சாஹித்ய அகாடமி, ஒடிசா சாஹித்ய அகாடமி உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.

ஈடுசெய்ய முடியாத இழப்பு
ரத்தின் மறைவுக்கு ஒடிசா ஆளுநர் எஸ்சி ஜாமீர் இரங்கல் தெரிவித்துள்ளார். ரத்தின் இழப்பு ஒடிசா இலக்கியத்துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என அவர் தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார். ரத்தின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அம்மாநில ஆளுநர் ஜாமீர் தெரிவித்துள்ளார்.

எப்போதும் நினைவிலிருப்பார்
ஒடிசா முதல்வர் நவீன் பட்னாயக் ரத்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். ரத்தின் மறைவு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். ரத் தனது ரசிகர்களால் எப்போதும் நினைவு கூறப்படுவார் என்றும் நவீன் பட்னாயக் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications