சந்திரயான் -2: விக்ரம் லேண்டரின் சுற்று வட்டப் பாதை உயரம் மேலும் குறைப்பு!
Recommended Video

ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான் -2 விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் சுற்றுவட்டப்பாதை உயரம் மேலும் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவுக்கு மிக அருகில் விக்ரம் லேண்டர் பயணித்துக் கொண்டிருக்கிறது.
நிலவுக்கு இஸ்ரோ அனுப்பி வைத்த சந்திரயான் -2 விண்கலத்தில் இருந்து விக்டர் லேண்டர் நேற்று வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. இந்த விக்ரம் லேண்டரானது வரும் 7-ந் தேதி நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறக்கப்பட உள்ளது.

விக்ரம் லேண்டர் பிரிக்கப்பட்ட பின்னர் இன்று முதல் முறையாக அதன் சுற்றுவட்டப்பாதையின் உயரத்தை மேலும் குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதாவது நிலவை சுற்றி குறைந்தபட்சமாக 109 கி.மீ தொலைவிலும் அதிகபட்சமாக 120 கி.மீ தொலைவிலும் விக்ரம் லேண்டர் பயணித்துக் கொண்டிருக்கிறது.
அத்துடன் நிலவில் தரையிறங்குவதற்கான லேண்டரின் பேலோட் இன்ஜின்களையும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications