தெலுங்கானா, தமிழக மீனவர் பிரச்சனையால் முடங்கிய நாடாளுமன்றம்!
டெல்லி: தெலுங்கானா தனி மாநில விவகாரம் மற்றும் தமிழக மீனவர்கள் விவகாரத்தால் நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் இன்றும் முடங்கின.
தற்போதைய நாடாளுமன்றத்தின் இறுதி கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. தெலுங்கானா விவகாரம், ஸ்பெக்ட்ரம் புதிய தொலைபேசி உரையாடல்கள், அருணாசலப் பிரதேச மாணவர் படுகொலை, சீக்கியர் கலவரம் குறித்த ராகுல் பேட்டி ஆகியவற்றை முன்வைத்து எம்.பிக்கள் முழக்கம் எழுப்பியதால் லோக்சபா நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
ராஜ்யசபா நடவடிக்கைகளும் பகல் 2 மணி வரை பாதிக்கப்பட்டது. பின்னர் வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதா மீது விவாதம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மீண்டும் அமளி ஏற்பட ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது.

சீமாந்திரா எம்.பிக்கள்..
இந்நிலையில் இன்று 2வது நாள் கூட்டம் நடைபெற்றது. லோக்சபா தொடங்கிய போது தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா எம்பிக்கள் முழக்கமிட்டனர்.

திமுக எம்.பிக்கள்..
இதேபோல் திமுக எம்.பிக்கள், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சனையை எழுப்பினர்.

சமாஜ்வாடி எம்.பிக்கள்
இந்த களேபரத்துக்கு மத்தியில் சமாஜ்வாடி எம்பிக்களும் தங்களது பங்குக்கு கூச்சலிட சபை நடவடிக்கைகள் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

ராஜ்யசபாவிலும் அமளி
இதேபோல் ராஜ்யசபா கூடிய போது பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி எம்.பிக்கள் முழக்கமிட்டதால் சபை நடவடிக்கைகள் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

லோக்சபா நாள் முழுவதும் ஒத்திவைப்பு
பின்னர் 12 மணிக்கு லோக்சபா கூடிய போதும் அமளி நீடித்ததால் 2வது நாளாக நாள் முழுவதும் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. ராஜ்யசபா பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications