வேண்டுதலை நிறைவேற்றாவிட்டால் அவ்வளவு தான்.. கடவுளுக்கே தண்டனை கொடுக்கும் மக்கள்.. இந்தியாவில்தான்
ராய்பூர்: வேண்டுதல்களை நிறைவேற்றாவிட்டால் கடவுளுக்கும் தண்டனை வழங்கும் வினோதமான பழக்கங்கள் சத்தீஷ்கர் மாநிலத்தில் பின்பற்றப்படுகிறது. பக்தர்கள் வைக்கும் வேண்டுதல்களை நிறைவேற்றாத கடவுகள்களை கூண்டில் ஏற்றி தண்டனை வழங்கி வருகிறார்கள். குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அந்த தெய்வங்களை கோவில்களில் இருந்து அகற்றுவது, கோவில்களுக்கு பின்புறம் மரத்தடியில் வசிக்க வைப்பது என தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன.
தங்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் பெரும்பாலான மக்கள் உடனே கடவுளிடம் தான் வேண்டிக்கொள்கிறார்கள். இதேபோன்று ஒரு காரியம் நடக்கம் வேண்டும் என்றாலும் அதற்கும் கடவுளிடம் தான் வேண்டிக் கொள்கிறார்கள். மாணவர்கள் பரீட்சையில் எப்படியாவது பாஸ் ஆகிவிட வேண்டும் என்று வேண்டுவார்கள். பெரியவர்கள் தங்களுக்கு உள்ள கஷ்டங்கள் தீர வெண்டும் என்று வேண்டுதல் வைக்கின்றனர். இப்படி ஒவ்வொரு தரப்பிற்கும் ஒரு வேண்டுதல் இருக்கும்.

இவ்வாறு கடவுளிடம் வேண்டுதல் வைக்கும் பெரும்பாலான மக்கள், அந்த கஷ்டம் தீர்ந்துவிட்டாலோ, வேண்டுதல் நிறைவேறினாலோ நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். அதே சமயம் அந்த வேண்டுதல் நிறைவேறாவிட்டால் நாம் விரதங்களை சரியாக மேற்கொள்ளவில்லை என்று தங்களுக்குள் குறைபட்டுக் கொன்று மீண்டும் கடவுளை தீவிரமாக கும்பிடுவார்கள். பொதுவாக இப்படியான விஷயங்களை தான் நாம் பார்த்திருக்க முடியும்.
ஆனால் இதற்கு எல்லாம் மாறாக வேண்டுதல்களை நிறைவேற்றாவிட்டால் கடவுளாக இருந்தாலும் தண்டனை விதிக்கப்படுகிறது. சத்தீஷ்கர் மாநிலத்தில் தான் இப்படி வினோதமான பழக்கத்தினை செய்து வருகிறார்கள். அதாவது பக்தர்கள் வைக்கும் வேண்டுதல்களை நிறைவேற்றாத கடவுகள்களை கூண்டில் ஏற்றி தண்டனை வழங்கி வருகிறார்கள். குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அந்த தெய்வங்களை கோவில்களில் இருந்து அகற்றுவது, கோவில்களுக்கு பின்புறம் மரத்தடியில் வசிக்க வைப்பது என தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன.
தண்டனைக் காலம் முடிந்த பின் மீண்டும் கோவில்களுக்கு அந்த தெய்வங்கள் வைக்கப்படுகின்றன. இப்படி வினோதமான ரூல்ஸ்களை சத்தீஷ்கர் மாநிலத்தின் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்கள் பின்பற்றி வருகிறார்கள். இது பற்றிய விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் 70 சதவீதம் பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள். அங்கு வசிக்கும் கோண்டு, பத்ரா, ஹ்ல்பா, துர்வா போன்ற பழங்குடியின மக்கள் விசித்திரமான பழக்கங்களை பின்பற்றி வருகிறார்கள். அப்படித்தான் அங்குள்ள பங்காரம்மன் கோவிலில் திருவிழாவின் போது மற்ற சிறு தெய்வங்கள் மக்களின் வேண்டுதல்களை நிறைவேற்றாமல் இருந்தால் அந்த தெய்வங்கள் மீது குற்றம் சுமத்தலாம்.
தெய்வங்களிடம் வேண்டுதல் வைத்தும் விவசாயம் பொய்த்து போனாலோ, நோய்கள் குணம் ஆகாமல் போனாலோ, நீண்ட நாள் பிரச்சினை சரியாகாமல் போனாலோ அந்த தெயவத்தின் மீது மக்கள் குற்றம் சுமத்தலாம். கோவில் திருவிழாவின் போது பங்காரம்மன் முன்னிலையில், மக்கள் எந்தெந்த தெய்வங்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றாமல் போனதோ அந்த தெய்வங்கள் மீது குற்றம் சுமத்துவார்கள்.
பங்காரம்மன் கோவில் கடவுளின் நீதிமன்றத்தில் கிராம தலைவர்கள் தான் வழக்கறிஞர்கள். பறவைகள், விலங்குகள் தான் சாட்சியாளர்கள். பங்காரம்மனின் அறிவுறுத்தல்களுக்கு குரல் கொடுப்பதாக நம்பப்படும் கிராம தலைவர்களால் இதற்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது. குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அந்த தெய்வத்திற்கு தண்டனை வழங்கப்படும்.
அதாவது குற்றங்கள் நிரூபிக்கப்படும் தெய்வங்கள் அந்த கோவிலில் இருந்து ஓராண்டுக்கு வெளியேற்றப்படுவது, திருவிழா கொடுக்கப்படாமல் இருப்பது, தெய்வத்தை கோவிலுக்கு வெளியே மரத்தின் கீழ் தங்க வைப்பது போன்ற தண்டனைகள் வழங்கப்படுகின்றன. தண்டனைக் காலம் முடிந்த பிறகு மீண்டும் அந்த தெய்வங்கள் கோவிலுக்குள் எடுத்து வரப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications