Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமணம் செய்து ஏமாற்றியதாக நடிகை மேக்னா ராஜ் மீது தர்மபுரி வாலிபர் புகார்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: நடிகை மேக்னா ராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாகவும், இதற்கான ஆவணங்களை தர மறுப்பதாகவும், தர்மபுரியைச் சேர்ந்த வாலிவர் ஒருவர் மோசடி புகார் அளித்துள்ள சம்பவம் கன்னட சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் போலீசார் நடத்திய விசாரணையில் அது பொய்யான புகார் என்று தெரியவந்துள்ளது.

பிரபல தமிழ் நடிகையான பிரமிளாவின் மகள் தான் மேக்னா ராஜ். தமிழில் வெளியான காதல் சொல்ல வந்தேன், நந்தா நந்திதா, உயர் திரு 420 ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். தமிழில் சரியான வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் கன்னடம், மலையாள படங்களில் நடித்துள்ளார். கன்னடத்தில் பூஜங்கா, ராஜகுடி, லட்சுமணா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேக்னா தனது குடும்பத்தினருடன் பெங்களூரு ஜே.பி.நகரில் வசித்து வருகிறார். இந்த நிலையில், தமிழ்நாடு தர்மபுரியை சேர்ந்த வாலிபர் ஜனார்தன் பெங்களூரு போலீஸ் கமிஷனர் என்.எஸ். மேகரிக்கு இ மெயில் மூலம் ஒரு புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் கன்னடம் மற்றும் மலையாளத்தில் பிரபல நடிகையான மேக்னா எனது மனைவி ஆவார். அவருக்கும் எனக்கும் 2015ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி திருமணம் நடந்தது. பெங்களூருவில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டோம். சில நாட்கள் கணவன், மனைவியாக வாழ்த்து வந்தோம். அதன் பின்னர் தனக்கு படப்பிடிப்பு உள்ளது. நான் செல்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார். அதன் பின்னர் அவர் என்னை கணவனாக ஏற்று கொள்ள மறுத்துவிட்டார்.

நான் அவரை திருமணம் செய்ததற்கான சான்றிதழ்களை, தருவதற்கு மேக்னா மறுத்து வருகிறார். இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுத்து, மேக்னாவை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டுமென்று கூறியிருந்தார். இந்த புகாரை ஏற்ற மாநகர கமிஷனர் என்.எஸ் மெஹரிக், வழக்கை நடிகை மேக்னா வசித்து வரும் போலீஸ் சரகமான ஜே.பிநகருக்கு அனுப்பி வைத்தார்.

ஆதாரங்கள் இல்லை

ஆதாரங்கள் இல்லை

தெற்கு மண்டல டி.சி.பி லோகேஷ் குமார் மற்றும் ஜே.பிநகர் இன்ஸ்பெக்டர் ஆகியோர் இது குறித்து விசாரித்தனர். அதில் மேக்னாவை திருமணம் செய்து கொண்டதற்கான எந்தவிதமான ஆதாரமும் ஜனார்த்தனிடம் இல்லை என்று தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கை போலீசார் நிராகரித்துவிட்டனர். இந்த புகார் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளதால் கன்னட திரைப்பட உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாலிபரிடம் விசாரணை

வாலிபரிடம் விசாரணை

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.சி.பி லோகேஷ் குமார், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திரைப்பட நடிகை மேக்னா ராஜ் மீது மாநகர கமிஷனருக்கு இமெயிலில் வாலிபர் ஒருவர் மோசடி புகார் அளித்திருந்தார். அதை ஜே.பிநகர் போலீசாருக்கு அனுப்பி வைத்த கமிஷனர், என்னிடம் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கும்படி கூறினார்.

திருமணம் நடந்தது உண்மையா?

திருமணம் நடந்தது உண்மையா?

அதை ஏற்று எனது தலைமையிலான போலீசார் வாலிபரை அழைத்து விசாரித்தோம். முதல் கட்ட விசாரணையில் அவர் தமிழக தர்மபுரியை சேர்ந்த ஜனார்த்தன் என்று தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் மேக்னா ராஜூடன் எப்படி பழக்கம் ஏற்பட்டது. எங்கு திருமணம் செய்து கொண்டீர்கள் என்று கேள்வி எழுப்பினோம். அதற்கு அவரிடம் முறையான பதில் இல்லை. மேலும் திருமணமான பதிவாளர் அலுவலகத்தில் வாங்கிய சான்றிதழ், மற்றும் ஏதேனும் போட்டோக்கள் உள்ளதாக என்று கேட்டோம்.

புகார் நிராகரிப்பு

புகார் நிராகரிப்பு

அதற்கு அவர் இல்லை என்று பதில் கூறிவிட்டார். இது தவிர மேக்னா ராஜூவின் வீட்டின் முகவரி, அவர் எங்கு வசித்து வருகிறார். உங்களிடம் அவர் பேசியதற்கான செல்போன், உரையாடல் இருக்கிறதா என்று கேட்டதற்கு, எதுவும் இல்லை என்று கூறிவிட்டார். இவ்வாறு கேட்ட கேள்விகளுக்கெல்லாம், அவர் ஆதாரம் இல்லாமல் முழித்ததால், புகாரை அன்றேக்கே நிராகரித்துவிட்டோம். சம்பந்தப்பட்ட வாலிபர் மீது மேக்னாவின் பெற்றோர் புகார் அளித்தால், அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார் லோகேஷ் குமார்.

மனித உரிமை ஆணையமும் நிராகரிப்பு

மனித உரிமை ஆணையமும் நிராகரிப்பு

பெங்களூரு நகர கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் அளித்த அதே வாலிபர், மனித உரிமை ஆணையத்திற்கும் மேகனா ராஜ் மீது புகார் அளித்துள்ளார். போலீசார் மற்றும் மனித உரிமை ஆணையத்திற்கும் சேர்த்து மொத்தம் 15க்கும் அதிகமான முறை அவர் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை பரிசீலனை செய்த மனித உரிமை ஆணைய அதிகாரிகள், வாலிபரை அழைத்து விசாரித்து முறையான ஆதாரங்கள் மற்றும் திருமணம் செய்து கொண்டதற்கான ஆவணங்கள் இல்லை என்றதும், அவரது புகாரை நிராகரித்துவிட்டனர்.

பிரமிளா மறுப்பு

பிரமிளா மறுப்பு

இது குறித்து செய்தி அறிந்த மேக்னாவின் தாயும், தமிழ் திரைப்பட நடிகையுமான பிரமிளா, எனது மகள் மீது வாலிபர் ஒருவர் அளித்துள்ள புகார் குறித்து இதுவரை எனக்கு எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
அதேபோன்று மாநகர கமிஷனரோ அல்லது போலீசாரோ, இது தொடர்பாக எங்களிடம் எந்தவிதமான விசாரணையும் நடத்தவில்லை. திரைப்படத்துறையில் நடிகைகளின் மார்க்கெட்டை குறைப்பதற்காக, இதுபோன்ற போலி புகார்கள் அளிக்கப்படும். அதேபோன்றுதான் எனது மகள் மீது அவர் புகார் அளித்துள்ளார். அந்த வாலிபரை என் மகள் முன், பின் பார்த்தது இல்லை. அப்படி இருக்கையில் அவர் ஏன் எனது மகள் மீது புகார் அளிக்க வேண்டும்.

போலீசில் புகார்

போலீசில் புகார்

வாலிபரின் நடவடிக்கை பார்க்கும்போது, திரைப்பட துறையில் இருக்கும் யாரோ அவரை தூண்டிவிட்டு, புகார் அளிக்க செய்துள்ளனர். தமிழ், கன்னடம், மலையாள மொழிகளில் நடித்துள்ள எனது மகள் மீது இதுவரை எந்தவிதமான கரும் புள்ளியும் இல்லை. ஆனால் தற்போது அதை ஏற்படுத்துவதற்கு இந்த வாலிபர் முயற்சித்துள்ளார். அவர் யார் என்று விசாரித்து வருகிறோம். விரைவில் அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்படும். நீதிமன்றம் அவருக்கு தண்டணை வழங்கும்வரை நான் ஓயமாட்டேன் என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+