சென்னை வந்த ரயிலில் துணிகர கொள்ளை... ரூ. 3.5 லட்சம் நகை, பணம் திருட்டு!
விஜயவாடா: விஜயவாடாவிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ. 3.5 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
திங்கள்கிழமை அதிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து விஜயவாடா ரயில்வே கண்காணிப்பாளர் ஷியாம் பிரசாத் கூறுகையில், சந்தக், ஸ்மிதா உதய், தாரா வியாஸ் ஆகியோர் ஏ1 கோச்சில் பயணித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் ரயில்வே போலீஸில் ஒரு புகார் கொடுத்துள்ளனர்.
அதில் தாங்கள் வைத்திருந்த நகை, பணம் அடங்கிய பொருட்கள் திருட்டுப் போயுள்ளதாக கூறியுள்ளனர். மேலும், இந்த சூட்கேஸ்கள், காணாமல் போனதை, அதிகாலை 3.30 மணியளவில் பல்ஹர்ஷா என்ற இடத்தை ரயில் கடந்தபோதுதான் உணர்ந்ததாகவும் கூறியுள்ளார்.
அதேபோல பி 1 பெட்டியில் பயணித்த ஒரு பெண், தான் வைத்திருந்த ரூ. 10,000 பணம் அடங்கிய பர்ஸைக் காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார்.
சம்பந்தப்பட்ட ரயிலில் டிடிஆரோ அல்லது போலீஸாரோ, பிற ரயில்வே ஊழியர்களோ இல்லை என்றும் பயணிகள் கூறியுள்ளனர். திருடர்கள் யாரேனும் பயணிகள் போல நடித்து அந்த ரயிலில் பயணித்து திருடி விட்டு தப்பிப் போயிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு உரிய ரயில்வே போலீஸாருக்கு புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன என்றார் அவர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications