வெள்ள மீட்பு பணிகளில் மத்திய அரசு மெத்தனமா? சரமாரி கேள்வியால் பொன்.ராதாகிருஷ்ணன் நழுவல்
டெல்லி: தமிழக வெள்ள சேத மீட்பு பணிகளில் மத்திய அரசு மெத்தனமாக உள்ளதா என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க மத்திய நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பிரதமர் மோடியை இன்று சந்தித்து தமிழக வெள்ள நிலவரம் பற்றி மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம் தெரிவித்தார். பிறகு நிருபர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், "பிரதமரிடம் நிலமையை எடுத்து கூறியுள்ளேன். கன்னியாகுமரி முதல் சென்னை வரை இந்த மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது" என்றார்.
இன்று (02-12-2015) எனது டெல்லி இல்லத்தில் தமிழக வெள்ள சேதங்கள் குறித்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய போது. pic.twitter.com/zZZP8TtZYc
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) December 2, 2015 இதன்பிறகு நிருபர்களின் கேள்விகளுக்கு, பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பதில்:
கே: உத்தரகாண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்தபோது, மத்திய மீட்பு குழுவின் பல படைகள் அனுப்பி வைக்கப்பட்டதே, தமிழகத்திற்கு அப்படி அனுப்பி வைக்கப்பட்டது போல தெரியவில்லையே?
ப: ஏற்கனவே தமிழகத்திற்கு எத்தனை டீம் அனுப்பப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியும். தேவைப்படுவதற்கு ஏற்ப அனுப்புவார்கள்.
கே: போதிய அளவுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை சென்னையில் முகாமிட்டுள்ளதாக கருதுகிறீர்களா?
ப: தேவைப்பட்டால் கூடுதல் படைகள் அனுப்பப்படும்.
கே: ஆந்திராவுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.1000 கோடி கொடுக்கப்பட்ட நிலையில், தமிழகத்திற்கு குறைந்த நிதி கொடுக்கப்பட்டுள்ளதே. பாரபட்சம் பார்க்கிறதா மத்திய அரசு?
ப: நல்லதை பாராட்டும் மனது நமக்கு வர வேண்டும். இப்போது குறைகூறிக்கொண்டிருக்கும் நேரம் கிடையாது. நிவாரண பணிகளை பார்க்க வேண்டிய நேரம்.
கே: சமீபத்தில் மோடியை சந்தித்து, தமிழக வெள்ளம் பற்றி தெரிவித்தேன். தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்து என்று அவர் கூறினார். இது முறையா?
ப: தீபாவளி நேரத்தில் தீபாவளி வாழ்த்து கூறியதையும் குறையாக கூறக்கூடாது. பிரதமருக்கு தமிழக தகவல்கள் போய் சேர்க்கப்படுகின்றன. உரிய நடவடிக்கையை எடுப்பார். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கடைசிவரை ஒரு கேள்விக்கும், அமைச்சர் நேரடியாகவே பதிலளிகாமல் விளக்கெண்ணையில் வெண்டைக்காயை முக்கி எடுத்ததை போல கொழகொழவென பதில் சொன்னது இதில் கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications