குண்டு வெடிப்பு விசாரணை-சென்னை போலீஸ் பெங்களூர் விரைவு: ஆந்திராவிலும் விசாரணை
பெங்களூர்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் பெங்களூர் வந்துள்ளனர். ஆந்திராவிலும் விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
பெங்களூரிலிருந்து அசாம் மாநிலம் கவுகாத்தி நகருக்கு சென்ற ரயில், சென்னை சென்ட்ரலுக்கு வந்தபோது, திடீரென அதில் அடுத்தடுத்து இரு குண்டுகள் வெடித்தன. இதில் ஒரு பெண் உயிரிழந்தார், 14 பேர் படுகாயமடைந்தனர்.

ரயில் பெங்களூரில் இருந்து கிளம்பியதால் பெங்களூர் ரயில் நிலையத்து சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கர்நாடக போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, வட மாநிலத்தை சேர்ந்த சந்தேகத்திற்கிடமான ஒருவர் ரயிலில் ஏறிய காட்சியை போலீசார் பார்த்தனர். ஆனால் அவர் சென்னைக்கு வந்து சேராதது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
எனவே சென்ட்ரல் ரயில் நிலைய தாக்குதலுக்கு பெங்களூரில் சதித்திட்டம் தீட்டப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இவ்வழக்கை விசாரித்து வரும் தமிழக சிபிசிஐடி போலீசார், இன்று காலை விமானம் மூலம் பெங்களூர் வந்தனர். சிபிசிஐடி பிரிவின் டிஎஸ்பிக்கள், அன்பு, ஜெயகவுரி ஆகியோர் கொண்ட 10பேர் குழு பெங்களூர் வந்துள்ளது.
கர்நாடக போலீசாரின் உதவியுடன் அடுத்தகட்ட விசாரணையை அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். ரயில் நிலையத்துக்கு சென்று சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்க்க உள்ளனர். குண்டுவெடிப்பு நடத்தப்பட்ட ரயில், ஆந்திராவழியாக செல்வது என்பதால் ஆந்திர போலீசாரின் உதவியுடன் அம்மாநிலத்திலும் தமிழக போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு குழு ஐஜி மகேஷ்குமார் அகர்வால் நிருபர்களிடம் கூறுகையில் குண்டுவெடிப்பு தொடர்பாக பெங்களூரில் விசாரணை தொடங்கியுல்ளோம். ஆந்திர காவல்துறையினருடனும் இணைந்து சிபிசிஐடி காவல்துறையினர் பணியாற்றுகிறார்கள். தமிழகம், ஆந்திராவில் முழு விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications