ஏழுமலையானை தரிசிக்க எளிதாக பயணிக்கலாம்.. சென்னை - திருப்பதி ஹைவே ரூ.1,530 கோடியில் 6 வழிச்சாலை
திருப்பதி: சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் தேசிய நெடுஞ்சாலை 6 வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை ரூ.1,530 கோடியில் செயல்படுத்த டெண்டர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பின்னர் திருப்பதிக்கு வாகனங்களில் செல்லும் பக்தர்கள் எளிதாக போக்குவரத்து நெரிசல் இன்றி விரைவாக பயணம் செய்யலாம்.
ஆந்திர மாநிலத்தின் முக்கிய வழிபாட்டு தலங்களில் ஒன்று திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில். உலக அளவில் பணக்கார கோவில்களில் ஒன்றாக உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்த கோவிலுக்கு ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்கின்றனர்.

சாதாரண ஏழைமக்கள் நாள் கணக்கில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர். அதே நேரத்தில் விஐபிக்கள் அதற்கென உரிய தரிசன நேரத்தில் ஏழுமலையானை சிறப்பு தரிசன முறையில் வழிபடுகின்றனர். திருப்பதிக்கு வருபவர்கள் சுற்றியுள்ள கோவில்களுக்கும் சென்று வருவது வழக்கம்.
திருப்பதி திருமலை மட்டுமின்றி திருப்பதி மாவட்டத்தில் ஏராளமான கோவில்களும் உள்ளனர். திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், திருப்பதி கோவிந்தராஜ சுவாவி கோவில், சீனிவாச மங்காபுரம் கல்யாண வெங்கடேசுவர கோவில், அப்பலயகுண்டம் பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல கோவில்கள் உள்ளன. இதோபோல் ஆகாச கங்கா, தலகோனா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல சுற்றுலா தலங்கள் உள்ளன.
இதேபோல் காளஹஸ்தியில் உள்ள சிவன் கோயிலுக்கும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்பதிக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலான பக்தர்கள் காளஹஸ்திக்கும் சென்றுவிட்டுதான் வருவார்கள். ஆனால் இங்கு சாலை வசதி சரியான முறையில் இல்லை என பல ஆண்டுகளாக பக்தர்கள் குமுறி வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்னையிலிருந்து வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் ஆந்திரா-சென்னைஇடையே விமான நிலையங்கள், துறைமுகத்துக்கு அதிகளவில் வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் இந்தத் தடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதையடுத்து இந்த சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
திருப்பதியிலிருந்து சென்னை மார்க்கத்தில் உள்ள ரேணிகுண்டாவை அடுத்துள்ள காஜுல மான்யம் வரை ஏற்கெனவே 4 வழிச்சாலை உள்ளது. ஆதலால், இங்குள்ள கல்லூர் கூட்டுச்சாலை பகுதியிலிருந்து, புத்தூர், நகரி, திருத்தணி வழியாக திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வரை இந்த சாலையை அகலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆந்திராவில் 37 கிலோமீட்டர் தூரமும், தமிழகத்தில் 43 கிலோமீட்டர் தூரமும் 4 வழிச்சாலையிலிருந்து 6 வழிச்சாலையாக இது விஸ்தரிக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை ரூ.1,530 கோடியில் செயல்படுத்த டெண்டர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆறு வழிச்சாலை பயன்பாட்டுக்கு வரும் போது போக்குவரத்து நெரிசல் குறையும் சென்னையில் இருந்து ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் எளிதாகவும் விரைவாகவும் செல்லலாம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications