சத்தீஸ்கரில் இருந்து டெல்லிக்கு போன பணம்.. தேர்தலுக்கு நடுவே அமித்ஷா போட்ட குண்டு! திரும்பும் காங்
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தீவிர பிரசாரம் செய்தார். இந்த வேளையில் அவர் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் மீது பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதோடு, அவரை கடுமையாக விமர்சனம் செய்தார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சியை பிடிக்க 46 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். கடந்த 2018 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 68 இடங்களில் வென்றது. பாஜக 15 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.

இதையடுத்து காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. முதல்வராக பூபேஷ் பாகேல் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் 5 ஆண்டு பதவிக்காலம் முடிவுக்கு வர உள்ளது. இதனால் தற்போது சத்தீஸ்கரில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி நவம்பர் 7 ம் தேதி முதல் கட்ட தேர்தலும், அதன்பிறகு நவம்பர் 17 ம் தேதி 2வது கட்ட சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. நவம்பர் 7 ம் தேதி 20 தொகுதிகளுக்கும், அதன்பிறகு நவம்பர் 17 ம் தேதி 70 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுக்கள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தை பொறுத்தமட்டில் காங்கிரஸ்-பாஜக இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. வரும் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. அதேநேரத்தில் மறுபுறம் மாநிலத்தில் இழந்த செல்வாக்கை மீட்டு மீண்டும் அரியணை ஏறும் வகையில் வியூகம் வகுத்து பாஜக தேர்தலை எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தான் தேர்தலையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சத்தீஸ்கரில் பிரசாரம் செய்தார். பவ்னா போரா தொகுதியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அவர் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியையும், அம்மாநில காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேலையும் கடுமையாக விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக அமித்ஷா கூறியதாவது:
நீங்கள் அனைவரும் தேர்தலில் ஓட்டளிக்க செல்லும்போது எம்எல்ஏவை தேர்வு செய்யப்போகிறோம் என்றோ, அமைச்சரவை தேர்வு செய்யப்போகிறோம் என்றோ வாக்களிக்க கூடாது. மாறாக உங்களின் ஓட்டு என்பது சத்தீஸ்கரின் நல்ல எதிர்க்காலத்துக்கானதாக இருக்க வேண்டும். அதோடு நக்சலைட்டுகளை ஒழிப்பது மற்றும் ஆதிவாசி மக்கள் வசிக்கும் பிராந்தியங்களை மேம்படுத்துவதற்கானதாக இருக்க வேண்டும்.
சத்தீஸ்கர் முதல்வராக உள்ள பூபேஷ் பாகேல் மக்களிடம் இருந்து கொள்ளையடித்துள்ளார். அவர் அரசியலில் தன்னை மேம்படுத்த நினைத்தாரே தவிர சத்தீஸ்கர் மக்களை முன்னேற்ற நினைக்கவில்லை. அதனால் தான் நான் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலை காங்கிரஸ் கட்சியின் ஒரு ‛ப்ரீ-பெய்ட்' முதல்வர் என கூறுகிறேன். இவரது வேலிடிட்டி முடிந்துவிட்டது.
கடந்த 5 ஆண்டில் பூபேஷ் பாகேல் சத்தீஸ்கரை காங்கிரஸ் கட்சியின் ஏடிஎம்மாக பயன்படுத்தினார். மீண்டும் அவர் முதல்வரானால் இன்னும் பல ஆயிரம் கோடி ரூபாய் ‛ப்ரீ பெய்ட் கார்டு' மூலம் எடுத்து கொள்வார். இந்த பணம் எல்லாம் டெல்லிக்கு தான் செல்கிறது. நிலைமை இப்படி இருந்தால் சத்தீஸ்கர் எப்படி முன்னேற்றம் அடையும்.
ப்ரீபெய்ட் சிம் கார்டை பொறுத்தமட்டில் அதில் பணம் இருந்தால் தான் பேச முடியும். அதேபோல் தான் பணம் இல்லாவிட்டால் பூபேஷ் பாகேலின் முதல்வர் பதவியும் காலியாகிவிடும். மேலும் அவர் கடந்த 5 ஆண்டு காலத்தில் நிறைய ஊழல்களை செய்துள்ளார்'' என விமர்சனம் செய்தார்.
-
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
நாடியே அடங்கிடுச்சே.. அதிமுக கூட போட்ட டீலா? அண்ணாமலை எங்கே? நயினாரிடம் நறுக்கென்று கேட்ட பியூஸ்! -
தமன்னா வருவாங்களா சார்? சுந்தர்.சி களமிறக்க போகும் நட்சத்திர குரூப்! குஷ்பூவால் அடிக்கும் அதிர்ஷ்டம் -
பியூஸ் கோயல் சொன்ன வார்த்தை.. இறங்கி வந்த அண்ணாமலை.. பாஜக வேட்பாளராக சம்மதம்? என்ன நடந்தது? -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி -
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பின் விஜய் ஆதரவை கோருவோம்.. என்டிஏ கூட்டணி ஆட்சி உறுதி.. ராம்தாஸ் அத்வாலே! -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா?












Click it and Unblock the Notifications