கர்நாடகாவை தொடர்ந்து சத்தீஸ்கரில் மீண்டும் வேட்டை- என்கவுண்ட்டரில் 10 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை!
டெல்லி: கர்நாடகா மாநிலத்தைத் தொடர்ந்து சத்தீஸ்கரில் மீண்டும் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் உக்கிரம் அடைந்துள்ளன. சத்தீஸ்கரில் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் தேடுதல் நடவடிக்கையின் போது தாக்குதல் நடத்தியதால் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 10 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தியாவில் நடைமுறையில் உள்ள ஜனநாயக அமைப்பை ஆயுதப் போராட்டம் மூலம் மாற்றி கம்யூனிச அரசாங்கத்தை நிறுவுவதுதான் மாவோயிஸ்டுகளின் போராட்டம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டின் பல பகுதிகளில் குறிப்பாக மலை மாவட்டங்கள், பழங்குடிகள் பகுதிகள் மாவோயிஸ்டுகளின் செங்கொடி ஓங்கி உயரப் பறந்தது.

ஆனால் மத்திய மாநில அரசுகளின் தொடர் நடவடிக்கைகள், பழங்குடிகள் பூர்வ நிலங்களில் இருந்து வெளியேறி மைய நீரோட்டங்களில் இணைதல் உள்ளிட்டவைகளால் மாவோயிஸ்டுகள் செல்வாக்கு சரிந்து போனது. இப்போதும் நாட்டின் சில மாவட்டங்களில்தான் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருந்து வருகிறது. மாவோயிஸ்டுகளை முழுமையாக அழித்தொழிப்பது என்பதுதான் மத்திய அரசின் இலக்காகவும் உள்ளது.
இந்த நிலையில் அண்மையில் கர்நாடகா மாநிலத்தின் உடுப்பி பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருந்தனர். அப்போது மாவோயிஸ்டுகள் தடுப்பு பிரிவு போலீசார் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் மாவோயிஸ்டுகள் குழு, பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பாதுகாப்பு தரப்பில் பதிலடி தரப்பட்டது. இதில் கர்நாடகா மாநில மாவோயிஸ்டுகள் குழு தலைவர் விக்ரம் கவுடா சுட்டுக் கொல்லப்பட்டார். 22 ஆண்டுகளாக கர்நாடகாவில் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்டு தலைவர்தான் விக்ரம் கவுடா.
இதனையடுத்து இன்று சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தின் வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது பாதுகாப்பு படை வீரர்கள் மீது மாவோயிஸ்டுகள் திடீரெனத் தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படை தரப்பில் பதிலடி தரப்பட்டது. இரு தரப்புக்கும் இடையே சில மணிநேரங்கள் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த மோதலில் 10 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் சுக்மா மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications