சத்தீஸ்கர் தேர்தல்: காங்கிரஸ் மாஸ் வெற்றியுடன் ஆட்சியை தக்க வைக்கும்- பாஜக படுதோல்வி- Lok Poll சர்வே
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி பிரம்மாண்ட வெற்றியுடன் ஆட்சியைத் தக்க வைக்கும் என்கிறது லோக் போல்- Lok Poll கருத்து கணிப்பு முடிவுகள். சத்தீஸ்கரில் ஆட்சியை கைப்பற்றலாம் என்கிற பாஜக கனவு பலிக்காது என்பதை இக்கருத்து கணிப்பு முடிவுகள் வெளிப்படுத்தி உள்ளன.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 46 இடங்கள். சத்தீஸ்கர் மாநிலத்தில் 2018 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 68 இடங்களிலும் பாஜக 15 இடங்களிலும் வென்றது. தற்போது சத்தீஸ்கர் சட்டசபையில் காங்கிரஸுக்கு 71 எம்.எல்.ஏக்களும் பாஜகவுக்கு 14 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். சத்தீஸ்கர் மாநில முதல்வராக மூத்த காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாகல் பதவி வகித்து வருகிறார்.

சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் எப்படியாவது வெல்வதற்கு பாஜக முனைப்பு காட்டுகிறது. பிரதமர் மோடி தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இன்னொரு பக்கம் காங்கிரஸ், உட்கட்சி மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்து ஆட்சியை தக்க வைப்பதில் தீவிரமாக உள்ளது.
இந்நிலையில் Lok Poll நிறுவனம் சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் தொடர்பாக கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது. இதன் விவரம்:
காங்கிரஸ் 56 முதல் 60 இடங்கள் (43%-45%)
பாஜக 25 முதல் 29 இடங்கள் (37%- 39%)
பகுஜன் சமாஜ் 1 முதல் 2 இடங்கள் (04%-06%)

மொத்தம் 13,500 பேரிடம் நடத்த கருத்து கணிப்பின் அடிப்படையில் இந்த முடிவுகளை Lok Poll நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பிரம்மாண்டமான வெற்றியுடன் ஆட்சியைத் தக்க வைக்கும் என்கிறது Lok Poll கருத்து கணிப்பு முடிவுகள். பாஜக போராடினாலும் பெரும்பான்மைக்குரிய இடங்களை தொடவே முடியாத நிலைதான் என்கிறது Lok Poll சர்வே முடிவுகள்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம்












Click it and Unblock the Notifications