பாஜகவுக்கே தெரியும்.. மக்கள் நம்பமாட்டாங்க! காங்கிரஸை சத்தீஸ்கர் மலைபோல் நம்புது.. முதல்வர் பூபேஷ்
ராய்ப்பூர்: காங்கிரஸ் கட்சி மீது சத்தீஸ்கர் மக்கள் எப்போதும் நம்பிக்கை வைத்து உள்ளார்கள் என்று அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல் தெரிவித்து உள்ளார்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை கடந்த மாதம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், மிசோரம் மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 7 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும், ராஜஸ்தானில் நவம்பர் 30 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். அனைத்து மாநிலங்களிலும் டிசம்பர் 3 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவித்தது.

இதனை தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட தொடங்கி உள்ளார்கள். சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ், பாஜக ஆகியவை பிரதான கட்சிகளாக உள்ளன. ஆளும் காங்கிரஸ் கட்சிக்கே வெற்றிவாய்ப்பு உள்ளதாக பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சத்தீஸ்கர் மக்களிடம் பாஜக எந்த வாக்குறுதியையும் கொடுக்கவில்லை.
ஏனென்றால் தங்களின் வாக்குறுதியை சத்தீஸ்கர் மக்கள் நம்ப மாட்டார்கள் என்று அவர்களுக்கே தெரியும். சத்தீஸ்கர் மக்கள் எப்போதுமே பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் கட்சி அரசு மீதே நம்பிக்கை வைத்து உள்ளார்கள்." என்றார். சத்தீஸ்கர் தேர்தலில் துர்க் மாவட்டத்தில் உள்ள படான் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த திங்கட்கிழமை வேட்புமனுவை தாக்கல் செய்த பூபேஷ் பாகேல் செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.
சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சியின் வலுவான மண்டலமாக இது பார்க்கப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் 12 தொகுதிகளில் 11 தொகுதிகளை இந்த மண்டலத்தில் கைப்பற்றியது காங்கிரஸ். சத்தீஸ்கர் முதலமைச்சர் பாகேலின் விமர்சனத்துக்கு பதிலளித்து உள்ள அம்மாநில முன்னாள் முதலமைச்சரும், பாஜக துணைத் தலைவருமான ரமன் சிங், "பூபேஷ் பாகெலின் ஆட்சிகாலம் இன்னும் 40 நாட்களுக்குதான்." என்றார்.












Click it and Unblock the Notifications