பிராமணர் எதிர்ப்பு பேச்சு- தந்தையையே கைது செய்து சிறைக்கு அனுப்பிய சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல்
ராய்ப்பூர்: பிராமணர்களை விமர்சித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் 86 வயதாகும் தமது தந்தை நந்தகுமாரை பாகலை கைது செய்து சிறைக்கு அனுப்பியுள்ளார் சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல். பிராமணர்களை இந்தியாவில் இருந்து விரட்ட வேண்டும் என்று பேசியிருந்தார் நந்தகுமார் பாகல்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. அம்மாநில முதல்வராக பூபேஷ் பாகல் உள்ளார்.

பிராமணர் எதிர்ப்பு பேச்சு
அண்மையில் பூபேஷ் பாகலின் தந்தை நந்தகுமார் பாகல் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்குள்ளும் பிராமணர்களை அனுமதிக்காதீர்கள். அவர்கள் அன்னியர்கள். பிராமணர்களைப் புறக்கணிக்க வேண்டும். கங்கை நதியில் இருந்து வால்கா ஆற்றின் கரைக்கே அவர்கள் துரத்தியடிக்கப்பட வேண்டியது அவசியம்.நான் மற்ற அனைத்து சமூகத்தினரிடமும் பேசுவேன் என்றார்.

முதல்வர் தந்தை மீது புகார்
இதற்கு முன்னரும் நந்தகுமார் பாகல் இப்படி பேசியதாகவும் கூறப்படுகிறது. இம்முறை அவரது மகன் மாநில முதல்வராக இருப்பதால் சத்தீஸ்கர் அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் நந்தகுமார் மீது ராய்ப்பூர் டிடி நகர் காவல்நிலையத்தில் பிராமணர் சமூகத்தினர் புகாரும் கொடுத்தனர். இதனையடுத்து நந்தகுமார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மகன் ஆட்சியில் தந்தை மீதே போலீசார் வழக்கு செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் திரும்பிப் பார்க்கவும் வைத்தது.

அப்பா என்பதற்காக மன்னிக்க முடியாது
அத்துடன் இது தொடர்பாக கருத்து தெரிவித்த பூபேஷ் பாகல், என் தந்தை என்பதற்காக அவர் பேசிய பேச்சை ஏற்க முடியாது. அவர் பேசியது மன்னிக்க முடியாதது. என்னைப் பொறுத்தவரை சட்டத்தின் முன் அனைவருமே சமம். நமது சட்டத்திற்கு மேலானவர்கள் என யாருமே இல்லை. சத்தீஸ்கர் மாநில அரசு அனைத்து மதம், சமூகங்களையும் ஒரே மாதிரியாகத்தான் பார்க்கிறது. என் தந்தையின் பேச்சு சமூக ஒற்றுமைக்கு எதிரானது. ஒரு மகனாக என் தந்தை மீது மரியாதையும் மதிப்பும் உண்டு. ஆனால் மாநிலத்தின் முதல்வராக அவரது பேச்சை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.

முதல்வரின் தந்தை கைது
இந்த நிலையில் பிராமணர்களுக்கு எதிராக பேசிய வழக்கில் நந்தகுமார் இன்று ராய்ப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் ராய்ப்பூரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நீதிமன்ற உத்தரவுப்படி 15 நாட்கள் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சமூக மோதலை தூண்டும் பேச்சு
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ராய்ப்பூர் டிடி நகர் போலீஸ் அதிகாரி யோகித கப்ராதே, நந்தகுமார் பாகெல் பேச்சுக்கு ஆட்சேபனை தெரிவித்து பிராமணர்கள் புகார் அளித்தனர். சமூகங்களிடையே மோதலை உருவாக்கும் வகையில் நந்தகுமார் பாகல் பேசியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளித்தார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications