பாஜக 15 சீட்டுகளை தாண்டுதான்னு பார்ப்போம்.. கலாய்த்த சத்தீஸ்கர் முதலமைச்சர்! திக் திக் டிசம்பர் 3
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 15 சீட்டுகளுக்கு மேல் வெற்றிபெறுகிறதா என்று பார்ப்போம் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல் தெரிவித்து உள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதன் பதவிகாலம் நிறைவடையும் நிலையில், கடந்த நவம்பர் 7 ஆம் தேதி மற்றும் நவம்பர் 17 ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடந்து முடிந்தது. இதில் ஆளும் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. டிசம்பர் 3 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

இந்த நிலையில் அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல் பாஜகவை மீண்டும் கடுமையாக விமர்சித்து உள்ளார். சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தலில் அவர்களால் 15 இடங்களாவது வெற்றி பெற முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும் என்று அவர் சவால் விடுத்து உள்ளார். பாஜகவை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் ரமன் சிங் சத்தீஸ்கர் மாநில தேர்தலில் 55 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு பதிலளிக்கும் வகையில் பூபேஷ் பாகேல் பேசுகையில், "ரமன் சிங் புகழ் உச்சத்தில் இருந்தபோதுகூட அவரால் சத்தீஸ்கரில் 52 இடங்களைத் தாண்ட முடியவில்லை. இப்போது, அவர்கள் எப்படி 55 இடங்களில் வெல்ல முடியும்? அவர் தனது தொண்டர்களை ஊக்கப்படுத்த இதையெல்லாம் சொல்கிறார். தேர்தல் முடிவுகள் வந்ததும், அவர்கள் 15 இடங்களைத் தாண்டுகிறார்களா என்பது அனைவருக்கும் தெரியும்." என்றார்.
நவம்பர் 7 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்த பிறகு, ரமன் சிங் பேசுகையில், "20 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்துள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 20 தொகுதிகளில் குறைந்தது 14 இடங்களில் பாஜக வெற்றி பெறும்." என்றார். அம்மாநில துணை முதலமைச்சர் டிஎஸ் சிங் தியோ பேசுகையில் சத்தீஸ்கரில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்ம் என்று நம்பிக்கை தெரிவித்தார். தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த டிஎஸ் சிங் தியோ இவ்வாறு தெரிவித்தார்.
அவர் பேசுகையில், "காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும். வாக்குப்பதிவு சதவீதம் நல்ல நிலையில் உள்ளது. சராசரி வாக்குப்பதிவு சதவீதம் சுமார் 72 - 73 சதவீதம் இருக்கலாம். காங்கிரஸ் மேற்கொண்ட பணிகளின் நேரடி தாக்கம் தேர்தல் முடிவுகளில் இருக்கும். எனது தொகுதியிலும் காங்கிரஸ் வெல்லும்." என்றார். சத்தீஸ்கரில் 2003 முதல் 2018 வரை தொடர்ந்து பாஜக ஆட்சி செய்து வந்தது. ஆனால், 2018 தேர்தலில் அக்கட்சி காங்கிரஸின் வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
இழந்த சத்தீஸ்கரை மீட்க வேண்டும் என்ற முனைப்புடன் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்கள், மாநில பாஜக நிர்வாகிகள் சத்தீஸ்கரில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். அமித்ஷா பூபேஷ் பாகேலை "பிரீபெய்டு முதலமைச்சர்" என்ர சாடினர். லட்சம் வாங்கிக்கொண்டு பூபேஷ் பாகேல் பணி செய்வதாக அமித்ஷா குற்றம்சாட்டினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications