சத்தீஸ்கர்: 8 சிட்டிங் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 'நோ' சீட்! அத்தனை அமைச்சர்களும் மீண்டும் போட்டி!
Subscribe to Oneindia Tamil
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி 8 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுத்துள்ளது. அதேநேரத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 12 அமைச்சர்களுக்கும் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் மாநில சட்டசபை தொகுதிக்கு நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ், பாஜக இடையேயாதான் முதன்மை போட்டி. ஆம் ஆத்மி கட்சியும் தேர்தலில் களம் காண்கிறது. பாஜக ஏற்கனவே 85 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.

காங்கிரஸ் கட்சி முதல் கட்டமாக 30 தொகுதிகளின் வேட்பாளர்களை அறிவித்தது. காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலின் முக்கிய அம்சங்கள்:
- முதல்வர் பூபேஷ் பாகல், துணை முதல்வர் டிஎஸ் சிங் தியோ உட்பட 22 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் சரண்தாஸ் மஹந்த் உட்பட அனைத்து அமைச்சர்களும் மீண்டும் களம் காண்கின்றனர்.
- 8 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுத்துள்ளது காங்கிரஸ்.
- 30 வேட்பாளர்களை கொண்ட இந்த பட்டியலில் 9 பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்.
- காங்கிரஸ் அறிவித்த 30 வேட்பாளர்களில் 14 பழங்குடி வேட்பாளர்கள், 3 தனித் தொகுதி வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
- 30 வேட்பாளர்களில் 4 பேர் பெண்கள். இவர்களில் அமைச்சர் மற்றும் 2 சிட்டிங் எம்.எல்.ஏக்கள் அடங்குவர்.
- 2018 தேர்தலில் ஆஹிவாரா தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் குரு ருத்ர குமார் இம்முறை நவகார் தொகுதியில் போட்டியிடுகிறார்.
- மாவோயிஸ்டுகள் கோட்டையான தண்டேவடாவில் சவிந்திர கர்மா போட்டியிடுகிறார். மறைந்த காங்கிரஸ் தலைவர் மகேந்திர கர்மாவின் மகன் சவிந்திர கர்மா. 2013-ம் ஆண்டு மாவோயிஸ்டுகளால் மகேந்திர கர்மா படுகொலை செய்யப்பட்டார். சவிந்தர கர்மாவின் தாயார் தேவ்தி கர்மா தற்போது சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
- சத்தீஸ்கர் கனிமவள கார்ப்பரேஷன் தலைவரான காங்கிரஸ் மூத்த தலைவர் கிரிஷ் தேவன்கான், பாஜகவின் முன்னாள் முதல்வரும் தற்போதைய தேசிய துணைத் தலைவருமான ரமண் சிங்கை எதிர்த்து ராஜ்நந்தகோன் தொகுதியில் களம் காணுகிறார். அண்மையில் அமலாக்கத்துறையின் சோதனைகளில் சிக்கியவர் கிரிஷ் தேவன்கான்.
- முதல்வர் பூபேஷ் பாகலுக்கு எதிராக கோஷ்டி சேர்த்து அரசை கேள்வி கேட்ட சிட்டிங் எம்.எல்.ஏ. சன்னி சாகுவுக்கு சீட் வழங்கப்படவில்லை.
- சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவரும் பஸ்தார் லோக்சபா தொகுதி எம்.பி.யுமான தீபக் பைஜ், சித்ரகோட் (பழங்குடிகள்) தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.
More From
-
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி












Click it and Unblock the Notifications