சட்டிஸ்கர் தேர்தல்.. மக்களை பயமுறுத்தும் நக்சல்.. பாதுகாப்பு பணியில் 1 லட்சம் வீரர்கள்!
சட்டிஸ்கரில் இன்று முதற்கட்ட சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் வீரர்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
Recommended Video

ராய்பூர்: சட்டிஸ்கரில் இன்று முதற்கட்ட சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் வீரர்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
சட்டிஸ்கரில் இன்று முதற்கட்ட சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. சட்டிஸ்கரில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளது. அதில் 18 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.
இரண்டாம் கட்டமாக வரும் 20 தேதி 72 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. டிசம்பர் 11ம் தேதி வாக்குகள் எண்ணப்படும். காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கிவிட்டது. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெறும்.
[சட்டிஸ்கர்: இன்று முதற்கட்ட சட்டமன்ற தேர்தல்... வாக்குப்பதிவு தொடங்கியது]

மக்களுக்கு எச்சரிக்கை
அங்கு நக்சல் மக்களுக்கு பெரிய அளவில் எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் யாரும் வாக்களிக்க செல்ல கூடாது என்று நக்சல் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. மேலும் வாக்களிக்க செல்லும் மக்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

பெரிய தாக்குதல்
சட்டிஸ்கரில் சட்டமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில் நேற்று 6 இடங்களில் குண்டு வெடித்து இருக்கிறது. இதனால் அங்கு பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் மாவோயிஸ்டுகளுக்கு இடையே கடும் சண்டை நடந்தது. இதில் மாவோயிஸ்ட் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான். பாதுகாப்பு படை வீரர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். கடந்த வாரம் முழுக்கவே அங்கு நக்சல் தாக்குதல் அதிகம் நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

எந்த பகுதிகள்
சட்டிஸ்கரில் தாண்டேவாடா காட்டுப்பகுதி, பிஜப்பூர் உள்ளிட்ட ஆறு இடங்களில் நேற்று இந்த வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இன்று அங்கு மொத்தம் 18 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. முக்கியமான 8 மாவட்டங்களில் இந்த 18 தொகுதிகள் உள்ளது. இவை அனைத்தும் நக்சல் அச்சுறுத்தல் உள்ள இடங்கள் ஆகும். இதில் 7 மாவட்டங்கள் அதிக அளவில் நக்சல் தாக்க கூடிய ஆபத்து உள்ள இடங்கள் என்பதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெரிய அளவில் பாதுகாப்பு
இந்த தேர்தல் காரணமாக அங்கு பெரிய அளவில் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. ராணுவ வீரர்கள், பாரா மிலிட்டரி படை என்று மொத்தம் 1 லட்சம் வீரர்கள் அங்கு பணிக்கு அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல் அரசியல் வாதிகளுக்கு தனி பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
|
என்ன வசதி
இந்த வாக்குபதிவு மையங்கள் அனைத்தும் சாட்டிலைட் மற்றும் டிரோன் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. அது மட்டுமில்லாமல் கஷ்டமான பகுதிகளில் மக்கள் வாக்களிக்க வசதியாகி ஹெலிகாப்டர்கள் 12 ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மக்கள் காடுகளில் சென்று வாக்களிக்க வசதியாக பாதுகாப்பு படையினரும் துணைக்கு வர இருக்கிறார்கள்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications