"வேட்பாளரான என்னையே பூத்துக்குள் விடல.. பாஜக குண்டர்கள் அராஜகம்".. பூபேஷ் பாகேல் பரபர புகார்!
ராய்பூர்: சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் வேட்பாளருமான பூபேஷ் பாகேல், தன்னை வாக்குச்சாவடிக்குள் நுழைய விடாமல் பாஜகவினர் தடுத்து நிறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 11 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. சத்தீஸ்கர் மாநிலத்தில் லோக்சபா தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19 முதற்கட்டத் தேர்தலில் ஒரு தொகுதிக்கும், ஏப்ரல் 26 இரண்டாம் கட்டத் தேர்தலில் 3 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. அடுத்ததாக வரும் மே 7 மூன்றாம் கட்டத் தேர்தலில் சத்தீஸ்கர் மாநிலத்தில் மீதமுள்ள 7 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

கடந்த 2019 லோக்சபா தேர்தலில் சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 11 தொகுதிகளிலும் பாஜகவும், காங்கிரஸும், பகுஜன் சமாஜ் கட்சியும் தனித்துப் போட்டியிட்டன. இதில், பாஜக, 51.44% வாக்குகளுடன் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 41.50% வாக்குகளுடன் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சி 2.33% வாக்குகளை மட்டுமே பெற்றது.
இந்த லோக்சபா தேர்தலில் சத்தீஸ்கரில் பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் தனித்து களம் காண்கின்றன. பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரண்டாம் கட்ட தேர்தலில் சத்தீஸ்கர் மாநிலத்தின் 3 லோக்சபா தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
சத்தீஸ்கரில் 73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் ராஜ்நந்த்கான் லோக்சபா தொகுதி வேட்பாளருமான பூபேஷ் பாகேல், தன்னை வாக்குச்சாவடிக்குள் நுழைய விடாமல் பாஜக குண்டர்கள் தடுத்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.
भूपेश बघेल स्वयं प्रत्याशी है और उसे भाजपा के लोग पोलिंग बूथ पर जाने से रोक रहे हैं.
— Bhupesh Baghel (@bhupeshbaghel) April 26, 2024
भाजपा बूथों पर अपने गुंडे भेजकर लोगों को डराने, धमकाने का काम कर रही है. अपने खिलाफ लोगों का रुझान देखकर छर्रे और उनके आका दोनों बौखला गए हैं.
कांग्रेस के कार्यकर्ता शांतिपूर्ण तरीके से अधिक से… pic.twitter.com/7OLIvwdGlx
ராஜ்நந்த்கான் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார் பூபேஷ் பாகேல். தற்போதைய பாஜக எம்.பி சந்தோஷ் பாண்டேவை எதிர்த்து பூபேஷ் பாகேல் போட்டியிடுகிறார். இந்நிலையில் தான், தன்னை வாக்குச்சாவடிக்கு செல்லவிடாமல் பாஜகவினர் தடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
வாக்குச் சாவடிக்கு வெளியே தான் இருக்கும் வீடியோவைப் பகிர்ந்த காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாகேல், “நானே ஒரு வேட்பாளர், பாஜகவினர் நான் வாக்குச் சாவடிக்குச் செல்வதைத் தடுக்கிறார்கள். வாக்களிக்கும் மக்களை மிரட்டவும் அச்சுறுத்தவும் பாஜக தனது குண்டர்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புகிறது,” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மற்றொரு சமூக வலைதள பதிவில், நடைபெற்றும் வரும் மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தனது புகைப்படம் தெளிவாக இல்லாதது குறித்து பூபேஷ் பாகேல் கவலை தெரிவித்தார். வாக்காளர்கள் தம்மைத் தொடர்பு கொண்டு இதுபற்றி கூறுவதாக பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள மற்ற வேட்பாளர்களின் புகைப்படங்கள் பெரியதாகவும் தெளிவாகவும் இருப்பதாகம், தனது படம் மட்டும் சிறியதாகவும் ஒப்பீட்டளவில் தெளிவற்றதாகவும் இருப்பதாகவும் அதிருப்தி தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் கோரியபடியே எனது புகைப்படம் வழங்கப்பட்டது. ஆனால், தெளிவற்ற வகையில் அச்சிட்டு இ.வி.எம் மெஷின்களில் ஒட்டியுள்ளனர். இது தேர்தல் ஆணையத்தின் முயற்சிகளை அம்பலப்படுத்துகிறது. இது சதி என்று நினைக்கிறேன். ஆனால் அது தேர்தல் முடிவை மாற்றப் போவதில்லை,” என்று பூபேஷ் பாகேல் கூறியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications