இந்துக்களை மதம் மாற்ற செய்ய வந்தால் தலையை வெட்டிடுங்க.. சத்தீஸ்கர் சாமியார் பேச்சால் சர்ச்சை
சுர்குஜா: மதம் மாற்றம் செய்ய சிறுபான்மையினர் உங்கள் வீடுகளுக்கு வந்தால் அவர்களது தலையை வெட்ட வேண்டும் என்று இந்து சாமியார் பரமாத்மானந்த் பேசியிருப்பது சர்ச்சையாக வெடித்துள்ளது.
2017-ம் ஆண்டு ஹரியானாவில் பசு பாதுகாப்பு இயக்கத்தினரால் பெஹ்லு கான் என்பவர் அடித்தே கொல்லப்பட்டார். பசு பாதுகாப்பு என்ற பெயரால் நடைபெறுகிற வன்முறைகளை பிரதமர் மோடி கண்டித்திருந்தார்.
ஆனால் பசு பாதுகாப்பு என்ற பெயரிலான படுகொலைகளை ஆதரித்தவர் சாமியார் பரமாத்மானந்த். அத்துடன் இத்தகைய கொலையாளிகளுக்கு பசு பாதுகாவலர்கள் என்கிற பட்டம் தந்து அரசு மரியாதை அளிக்க வேண்டும் எனவும் பேசியவரும் இந்த சாமியார் பரமாத்மானந்த்தான்.

பாஜக தலைவர்கள் முன்னிலையில்..
தற்போது மதமாற்ற விவகாரத்தில் வன்முறையை தூண்டும் வகையில் சாமியார் பரமாத்மானந்த் பேசியிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜா என்ற இடத்தில் கட்டாய மதமாற்றத்துக்கு எதிராக கண்டன கூட்டம் நடைபெற்றது. இதில் சத்தீஸ்கர் மாநில பாஜக தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.

கோடாலி எதற்கு?
இந்த கூட்டத்தில் சாமியார் பரமாத்மானந்த் பேசியதாவது; நான் ஒரு துறவி. நான் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. இங்கே பேசிய ராம்விசார் ஜியும் அதைத்தான் கூறினார். அதை நான் சற்று விரிவாக சொல்ல நினைக்கிறேன். உங்கள் வீடுகளில் தடிகளை வைத்திருங்கள். நம்முடைய கிராமங்கள் மக்கள் கை கோடாலிகளை வைத்திருக்கிறார்கள். எதற்காக இந்த கோடாலி வைத்திருக்கிறார்கள்?

கோடாலியால் தலையை வெட்டுங்க
மதமாற்றம் செய்ய வருகிறவர்களின் தலையை வெட்டத்தான் இந்த கோடாலியை வைத்திருக்கிறார்கள். ஒரு சாமியராக இருந்து கொண்டு வெறுப்பை தூண்டும் பேச்சை பேசுவதாக என் மீது குற்றம்சாட்டலாம். சில நேரங்களில் தீயை பற்ற வைக்க வேண்டிய தேவையும் இருக்கிறதே... மீண்டும் சொல்கிறேன்.. உங்கள் வீடு, தெரு, கிராமம் எங்கேயாவது மதமாற்றம் செய்ய வருகிறவர்களைப் பார்த்தால் அவர்களுக்கு மன்னிப்பு எல்லாம் கொடுக்காதீங்க.. இவ்வாறு சாமியார் பரமாத்மானந்த் பேசினார்.

பேசி பாருங்க..சுட்டுவிடுங்க
அத்துடன் இந்த வன்முறையை எப்படிச் செய்ய வேண்டும் என்கிற ஒரு பார்முலாவையும் சாமியார் பரமாத்மானந்த் அதே கூட்டத்தில் சொல்லி இருக்கிறார். அதாவது, மதமாற்றம் செய்ய வருகிறவர்களை முதலில் தடுத்து நிறுத்துங்கள். அடுத்ததாக உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யுங்கள். பின்னர் சுட்டுவிடுங்கள் என்றார் சாமியார் பரமாத்மானந்த். அவரது இந்த பேச்சு பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications