சத்தீஸ்கர்: மாவோயிஸ்டுகள் அட்டூழியம்- ஒருவர் சுட்டுக் கொலை- தேர்தல் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல்!
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என தாங்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் வாக்கு சாவடிகள் பக்கம் தேர்தல் அதிகாரிகள் ஒருவர் கூட வரக் கூடாது என மாவோயிஸ்டுகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் அரசுக்கு உளவு சொன்னதாக சந்தேகித்து பழங்குடி சமூகத்தை சேர்ந்த ஒருவரை சுட்டுப் படுகொலை செய்துள்ளனர் மாவோயிஸ்டுகள்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இம்முறை மாவோயிஸ்டுகள் கோட்டையாக இருந்த பகுதிகளில் புதிய வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவோயிஸ்டுகள் பகுதிகளில் 120க்கும் மேற்பட்ட பழங்குடி கிராம மக்கள் இந்த முறைதான் நாடு விடுதலைக்குப் பின்னர் முதல் முறையாக வாக்களிக்க இருக்கின்றனர்.

ஆனால் தேர்தல் பாதையை நிராகரித்து மக்கள் யுத்தம் மூலம் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற முழக்கத்தை மாவோயிஸ்டுகள் முன்வைத்துள்ளனர். ஆகையால் பொதுமக்கள் சட்டசபை தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என அழைப்பு விடுத்து போஸ்டர், பேனர்களையும் ஒட்டியிருக்கின்றனர்.
இந்த நிலையில் பிஜாபூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் உக்கிரம் காட்டத் தொடங்கி உள்ளனர். தேர்தல் தொடர்பாக அரசு தரப்புடன் இணைந்து செயல்பட்டவரை உளவாளி என முத்திரை குத்தி பழங்குடி சமூகத்தை சேர்ந்த ஒருவரை சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் சடலத்தை சாலை ஓரத்தில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.
மேலும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கும் மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பான எச்சரிக்கையில், பிஜாபூர் மாவட்டத்தில் நவம்பர் 7-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. நீங்கள் இந்த தேர்தலை நடத்துவதற்கு தயாராகிக் கொண்டிருப்பீர்கள். மாவோயிஸ்டுகளின் மேற்கு பஸ்தார் மண்டலம் ஏற்கனவே இந்த போலி தேர்தலைப் புறக்கணிக்க அழைப்பு விடுத்திருக்கிறது. பிஜாபூர் மாவட்டத்தில் மட்டும் 245 வாக்கு சாவடிகளை அமைத்துள்ளீர்கள். வாக்குப் பதிவு இயந்திரங்களை எடுத்துக் கொண்டு பாதுகாப்பு படை உதவியுடன் நவம்பர் 6-7-ந் தேதி இந்த வாக்கு சாவடிகளுக்கு நீங்கள் வருவீர்கள். ஆனால் உங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. உங்களது உயிர் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு இந்த வாக்கு சாவடிகளுக்கு நீங்கள் வராமல் இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம் என மிரட்டல் விடுத்துள்ளனர் மாவோயிஸ்டுகள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications