ஹமாஸ் பயங்கரவாதிகள் பாணியில் வனப் பகுதியில் நீண்ட சுரங்கம் அமைத்த மாவோயிஸ்டுகள்- சத்தீஸ்கர் ஷாக்!
ராய்ப்பூர்: பாலஸ்தீனத்தின் ஹமாய் பயங்கரவாதிகளைப் போல பல கிலோ மீட்டர் நீளத்துக்கு சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டேவடா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பயன்படுத்தி வந்த சுரங்கத்தை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்தியாவில் ஆயுதப் புரட்சி மூலம் இடதுசாரி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்பது மாவோயிஸ்டுகள் கொள்கை. மாவோயிஸ்டுகள் தற்போதைய நிலையில் சத்தீஸ்கர், ஒடிஷா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களின் எல்லைகளில் வனப்பகுதிகளில் மட்டுமே பதுங்கி இருக்கின்றனர். 10 ஆண்டுகளுக்கு முந்தைய மாவோயிஸ்டுகளின் பலம் இப்போது இல்லை என்பது நிதர்சனம்.

இருந்த போதும் அவ்வப்போது தங்களது இருப்பை வெளிக்காட்ட பாதுகாப்பு படையினரை இலக்கு வைத்து மாவோயிஸ்டுகள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவின் போது 10க்கும் மேற்பட்ட தாக்குதல்களை மாவோயிஸ்டுகள் நடத்தி இருந்தனர். மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை அரசுகள் தீவிரமாக மேற்கொள்வதால் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் பழங்குடி மக்கள் இப்போது மைய நீரோட்டத்தில் இணைந்துள்ளனர்.
இதனிடையே சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் மீது திடீரென மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். இதில் 3 பாதுகாப்பு படையினர் வீரமரணம் அடைந்தனர். மேலும் 14 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து சத்தீஸ்கர் மாநிலத்தின் பல்வேறு வனப் பகுதிகளில் மாவோயிஸ்டுகளை தேடி அழிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
#WATCH | Chhattisgarh: Visuals from a tunnel dug by Naxalites to be used as a bunker, in Dantewada.
— ANI (@ANI) January 31, 2024
(Source: Dantewada Police) pic.twitter.com/04gRKCtWYl
இத்தேடுதல் நடவடிக்கையின் போது சத்தீஸ்கர் சுக்மா மாவட்டம் தண்டேவடா வனப்பகுதியில் பதுங்கு குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இப்பதுங்கு குழிக்குள் இறங்கிய பாதுகாப்பு படையினருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அது பதுங்கு குழியே அல்ல.. பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நீண்ட சுரங்க பாதையை மாவோயிஸ்டுகள் உருவாக்கி இருந்தனர். பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் படைகளை எதிர்கொள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் உருவாக்கிய சுரங்க பாதைகளை போல் மாவோயிஸ்டுகள் இந்த பாதையை உருவாக்கி இருப்பதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்தன. இதேபோல தண்டேவடா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் உருவாக்கி வைத்துள்ள இதர கட்டுமானங்களையும் அழிக்கும் நடவடிக்கைகளை பாதுகாப்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications