நீதிபதிகள் புகார் எதிரொலி.. பதிலடியாக பிரஸ் மீட் செய்கிறாரா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: புகாருக்குள்ளான உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நிருபர்களுக்கு பேட்டியளிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், மதன் லோக்கூர், கோகாய் மற்றும் குரியன் ஜோசப் ஆகிய நால்வரும் நிருபர்களை சந்தித்தனர். இந்திய நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக இப்படி ஒரு சந்திப்பு நிகழ்ந்தது.

Chief Justice of India Dipak Misra to address the media

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் நடவடிக்கையில் தங்களுக்கு திருப்தியில்லை என்று அவர்கள் பரபரப்பு பேட்டியளித்தனர். ஒரு கடிதத்தையும் வெளியிட்டனர்.

பெரும் பரபரப்பை கிளப்பிய இந்த பேட்டியை தொடர்ந்து, தலைமை நீதிபதி தீபஸ் மிஸ்ரா, மத்திய தலைமை வழக்கறிஞர் வேணுகோபாலை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து, மதியம் 2 மணிக்கு தீபக் மிஸ்ரா மற்றும் வேணுகோபால் இணைந்து நிருபர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. தனது தரப்பு பதிலை அவர் மீடியா வாயிலாக தெரிவிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தீபக் மிஸ்ரா தற்போது ஒரு வழக்கு விசாரணையில் உள்ளார். அவர் நிருபர்களை சந்திக்கிறாரா, இல்லையா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chief Justice of India Dipak Misra to address the media at 2 pm, Attorney General to also accompany him.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X