முதல்வர் ஓபிஎஸ் பயணம் திடீர் ரத்து... வக்கீல்களுடன் டெல்லியில் அவசர ஆலோசனை
டெல்லியில் வழக்கறிஞர்களுடன் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழக அரசே அவசர சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டு நடத்த முடியுமா என்பது குறித்து அவர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
டெல்லி: முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சென்னை திரும்புவதாக இருந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து டெல்லி வக்கீல்களுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தக் கோரரி நடைபெற்று வரும் போராட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. சென்னை, மதுரை, சேலம் என அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இதையடுத்து இளைஞர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று டெல்லி சென்றார். இன்று காலை அவர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார்.

தமிழகத்துக்கு உறுதுனையாக இருக்கும்
அப்போது ஜல்லிக்கட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் மத்திய அரசு ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உதவ இயலாது என மோடி தெரிவித்தார். மேலும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு உறுதுனையாக இருக்கும் என்றும் மோடி கூறினார்.

விரைவில் காண்பீர்கள்
இதைத்தொடந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கையை விரைவில் காண்பீர்கள் என்றார். இதையடுத்து தமிழக அரசே ஜல்லிக்கட்டு நடத்த சட்டம் பிறப்பிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

சென்னை பயணம் ரத்து
இந்நிலையில் சென்னை திரும்பும் தனது பயணத்தை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ரத்து செய்துள்ளார். அதேநேரத்தில் டெல்லியில் உள்ள வழக்கறிஞர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

அவசர சட்டம் இயற்ற முடியுமா
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசே அவசர சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த முடியுமா என அவர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஜல்லிக்கட்டுக் கோரி தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி அதிகரித்துள்ளது.
-
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications