குழந்தைகளை பலாத்காரம் செய்து, ஆபாச படம் பார்க்க வைத்து, மலம் சாப்பிட வைத்த மகாராஷ்டிரா பள்ளி
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பழங்குடியின குழந்தைகளுக்கான உறைவிட பள்ளி ஒன்றில் படிக்கும் 5 சிறுவர், சிறுமியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் உள்ள கர்ஜத் நகரில் உள்ளது சந்திரபிரபா அறக்கட்டளை நடத்தும் பழங்குடியின குழந்தைகளுக்கான உறைவிடப் பள்ளி. அந்த பள்ளியில் படிக்கும் சிறுமி ஒருவர் விடுமுறையில் வீட்டுக்கு சென்றபோது தனது தாயிடம் தெரிவித்த விவரம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அந்த பள்ளி விடுதியில் தங்கியிருக்கும் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதுடன், அவர்களை கட்டாயப்படுத்தி ஆபாச படம் பார்க்க வைத்து உறவு கொள்வது, இயற்கைக்கு மாறாக உறவு கொள்வது, சிறுவர் சிறுமியரை ஒருவருடன் ஒருவர் உறவு கொள்ள வைப்பது, மறுத்தால் அவர்களை நாயின் மலத்தை சாப்பிட வைப்பது, அதை சாப்பிடும்போது அவர்கள் வாந்தி எடுத்தால் அதையும் அவர்களை சாப்பிட வைப்பது என்று பல கொடுமைகள் நடந்துள்ளது.
இதை எல்லாம் கேட்ட சிறுமியின் தாய் குழந்தை நல பாதுகாவலர்களிடம் தெரிவிக்க அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரணை நடத்தியபோது 5 குழந்தைகள் நடந்ததை விவரமாக தெரிவித்தனர். இந்த பள்ளியில் 4 முதல் 14 வயது வரை உள்ள பழங்குடியின மற்றும் ஏழை குழந்தைகள் 28 பேர் படிக்கிறார்கள். அவர்களுக்கு தான் இத்தனை கொடுமையும் நடந்துள்ளது.
இந்த சம்பவம் பற்றி வழக்குப் பதிவு செய்த போலீசார் அறக்கட்டளையின் உரிமையாளரான 52 வயது நபர் மற்றும் 30 வயது பெண் மேனேஜரை கைது செய்தனர். குழந்தைகள் அனைவரும் விடுமுறைக்காக ஊர்களுக்கு சென்றுள்ளனர். அவர்கள் வந்தவுடன் விசாரித்தால் தான் அதில் மேலும் எத்தனை பேருக்கு இந்த கொடுமை நடந்துள்ளது என்ற விவரம் தெரிய வரும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications