இதோடு 3வது முறை.. எவரெஸ்ட் தொடங்கி லடாக் வரை.. அத்துமீறும் சீனா.. பதிலடிக்கு தயாராகும் இந்தியா!
இந்தியாவின் லடாக் பகுதியில் இருக்கும் விமான எல்லைக்குள் சீன போர் விமானங்கள் இரண்டு கடந்த சில தினங்கள் முன் எல்லை மீறியதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
லடாக்: இந்தியாவின் லடாக் பகுதியில் இருக்கும் விமான எல்லைக்குள் சீன போர் விமானங்கள் இரண்டு கடந்த சில தினங்கள் முன் எல்லை மீறியதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே கடந்த சில தினங்களாக கொஞ்சம் கொஞ்சமாக உரசல் ஏற்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக சீனாவை அமெரிக்கா கடுமையாக எதிர்த்து வருகிறது. ஆனால் அமெரிக்காவிற்கு இந்தியா ஆதரவு அளித்து வருகிறது.
கொரோனா காலத்தில் சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை தங்கள் பக்கம் இழுக்க இந்தியா முயன்று வருகிறது. இந்தியா மீது இதனால் சீனா பெரும் கோபம் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

எல்லை மீறியது
இந்த நிலையில்தான் இந்தியாவின் எல்லையில் சீனா முதல்முறையாக கடந்த வாரம் அத்துமீறியது. அதன்படி சிக்கிம் எல்லையில் இந்திய வீரர்களுக்கும், சீன வீரர்களுக்கும் இடையே சண்டை வந்தது. சிக்கிம் பகுதியில் இருக்கும் நகு லா பகுதியில் இந்த சண்டை வந்துள்ளது. கடந்த இரண்டு நாட்கள் முன் நடு இரவில் இந்த சண்டை நடந்துள்ளது. இதனால் அப்போதில் இருந்தே அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த சண்டை பேச்சுவார்த்தை மூலம் சரி செய்யப்பட்டது.

மோசமான நிலை
ஆனாலும் இன்னும் அங்கு பதற்றம் நீடித்து வருகிறது. 5000 மீட்டர் உயரம் இருக்கும் மலை பகுதிக்கு அருகே உள்ள எல்லை பகுதியில் இந்த சண்டை நடந்துள்ளது. முதலில் வாய் தகராறாக இந்த சண்டை தொடங்கியது. அதன்பின் கற்கள் கொண்டு தாக்கிக் கொண்டு சண்டை செய்துள்ளனர். பின் துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இதில் யாரும் பலியாகவில்லை. சில வீரர்கள் மட்டும் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திபெத் அரசியல்
இன்னொரு பக்கம் திபெத்தை சீனாவின் ஒரு பகுதி என்று பல வருடமாக சீனா கூறிவருகிறது. அதோடு எவரெஸ்ட் சிகரத்தின் பெரும் பகுதியை திபெத் வரைபடத்திற்கு சீனா மாற்றி புதிய வரைபடம் வெளியிட்டுள்ளது. எவரெஸ்ட் சிகரத்தை திபெத்திற்கு கீழ் வருவதாக காட்டினால், அதை எதிர்காலத்தில் தங்கள் பக்கம் மாற்றிக்கொள்ளலாம் என்று சீனா நினைக்கிறது. முதலில் எவரெஸ்டை திபெத் நாடுடையது என்று கூறிவிட்டு பின் அதை அபகரிக்க சீன நினைக்கிறது. திபெத் நாட்டிற்கு இதனால் சீனா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது .

எவரெஸ்ட் சிகரம்
எவரெஸ்ட் சிகரத்தை கைப்பற்றினால் அது பாதுகாப்பு ரீதியான சீனாவிற்கு பெரிய பலன் அளிக்கும். இதனால் எவரெஸ்டை மொத்தமாக கைப்பற்றும் வகையில் சீனா இந்த செயலை செய்துள்ளது. ஆனால் இந்த பகுதிகள் எல்லாம் இந்தியாவிற்கு கீழ் வரும் பகுதிகள் ஆகும். அதன் மேப்பை மாற்றி சீனா வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதான் இரண்டு நாடுகளுக்கும் ஏற்பட்ட இரண்டாவது உரசல் ஆகும்.

மூன்றாவது முறை
இந்த நிலையில்தான் மூன்றாவது முறையாக தற்போது சீனா இந்தியாவிடம் அத்துமீறி உள்ளது. இந்தியாவின் லடாக் பகுதியில் இருக்கும் விமான எல்லைக்குள் சீன போர் விமானங்கள் இரண்டு கடந்த சில தினங்கள் முன் எல்லை மீறியதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஐந்தாம் தேதி இந்த விமானங்கள் இரண்டும் இந்தியாவின் லடாக் எல்லைக்குள் புகுந்து இருக்கிறது. மதிய வேளையில் விமானங்கள் உள்ளே வந்துள்ளது.

உடனே சென்றது
இதை அறிந்ததும் இந்திய போர் விமானங்களான இரண்டு சுகோய் விமானங்கள் அந்த இடத்திற்கு ரோந்து சென்றது. ஆனால் அதற்குள் இரண்டு சீன விமானங்களும் அங்கிருந்து சென்றுவிட்டது. இதில் எந்த விதமான தாக்குதலும் நடக்கவில்லை. சீன விமானப்படை இது தொடர்பாக விளக்கம் எதையும் அளிக்கவில்லை. சீனா அடுத்தடுத்து இப்படி எல்லையில் அத்துமீறுவது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்த தொடங்கி உள்ளது.

தக்க பதிலடி
சீனாவிற்கு எதிராக ஏற்கனவே அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, மலேசியா ஆகிய நாடுகள் கடும் கோபத்தில் இருக்கிறது. இந்த நிலையில் தற்போது அடுத்த திருப்பமாக இன்னொரு பக்கம் இந்தியாவுடனும் சீனா சண்டை போடா தொடங்கி உள்ளது. இதற்கு இந்தியா எப்படி பதிலடி கொடுக்கும், என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கும் என்றும் கேள்விகள் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications