லடாக் பேச்சுவார்த்தை.. பாங்காங் திசோ பற்றி பேச முடியாது.. மறுக்கும் சீனா.. எல்லையில் தொடரும் சிக்கல்

Subscribe to Oneindia Tamil

லடாக்: லடாக்கில் நடக்கும் எல்லை பிரச்சனை தொடர்பாக நேற்று நடந்த ராணுவ மீட்டிங்கில் சீன தரப்பு பாங்காங் திசோ பிரச்சனை குறித்து பேச மறுத்துவிட்டது. பாங்காங் திசோ பகுதியில் சீனாவின் படைகள் அதிக அளவில் இருக்கும் நிலையில், அது குறித்து சீனா நேற்று பேச்சுவார்த்தை நடத்த மறுத்துவிட்டது .

இந்தியா சீனா இடையே லடாக்கில் நடக்கும் மோதலில் பாங்காங் திசோ மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. பாங்காங் திசோ என்பது நீண்ட நதியை கொண்ட இந்தியாவையும் சீனாவையும் இணைக்கும் வாயில் போன்ற பகுதியாகும்.

Recommended Video

    Pangong Tso பகுதியை அப்படியே ஆக்கிரமிக்க துடிக்கும் China

    லடாக் எல்லையில் இருக்கும் இந்த நதி மற்றும் அதை ஒட்டிய நிலப்பகுதியை இந்திய சீனா இரண்டு நாடுகளும் பாதியாக பிரித்து ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. 1970ல் இருந்து, இங்கு அவ்வப்போது லேசான உரசல், பதற்றம் ஏற்பட்டு வருகிறது.

    பாங்காங் திசோ எப்படி இருக்கும்

    பாங்காங் திசோ எப்படி இருக்கும்

    பாங்காங் திசோவில் மொத்தம் 8 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளது. இந்த பாங்காங் திசோ கட்டுப்பாட்டு பகுதிகளை ஆங்கிலத்தில் பிங்கர்கள் (finger) என்று அழைப்பார்கள். பாங்காங் திசோவில் மொத்தம் 8 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளது.இதில் முதல் நான்கு கட்டுப்பாட்டு பகுதிகளை இந்தியா கட்டுப்படுத்துகிறது. அதேபோல் கடைசி நான்கு கட்டுப்பாட்டு பகுதிகளை சீனா கட்டுப்படுத்தி வருகிறது.

    எங்கு வந்தது

    எங்கு வந்தது

    எல்லையில் கடந்த இரண்டு மாதங்களாக சீனா அத்துமீறியது. அப்போது பாங்காங் திசோவில் இந்தியாவின் கட்டுப்பாட்டு பகுதிகள் 3 மற்றும் 4ஐ சீனா ஆக்கிரமித்தது. இதனால் இந்தியா அங்கு ரோந்து பணிகளை மேற்கொள்ளமுடியாமல் போனது. அதன்பின் கடைசியாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் சீனாவின் படைகள் இங்கிருந்து பின் வாங்கியது.

    என்ன நிலைமை

    என்ன நிலைமை

    ஆனால் இன்னும் கட்டுப்பாட்டு பகுதி 4ல் சீனாவின் டென்ட்கள் சில உள்ளது. அதேபோல் அங்கு சீனாவின் போர் வாகனங்கள் உள்ளது. அதேபோல் இன்னொரு பக்கம் சீனா தனது கட்டுப்பாட்டு பகுதி 5ல் ஒப்பந்தத்தை மீறி அதிக அளவில் படைகளை குவித்து உள்ளது . அங்கு வீரர்களும் அதிக அளவில் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். இதனால் இன்னும் பாங்காங் திசோ பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.

    நேற்று மீட்டிங்

    நேற்று மீட்டிங்

    இந்த நிலையில் இந்தியா - சீனா இடையே நேற்று ராணுவ ரீதியான பேச்சுவார்த்தை நடந்தது. எல்லையில் சீனா முழுமையாக படைகளை வாபஸ் வாங்காத நிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.இந்தியாவின் லெப்டினட் ஜெனரல் ஹரீந்தர் சிங் மற்றும் சீனாவின் மேஜர் ஜெனரல் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. நேற்று இரவு வரை இந்த பேச்சுவார்த்தை நீண்டது.

    பேசவில்லை

    பேசவில்லை

    ஆனால் இந்த மீட்டிங்கில் நேற்று பாங்காங் திசோ குறித்து பேச சீனா மறுத்துவிட்டது. கடந்த ஜூன் 14ம் தேதி நடந்த மீட்டிங்கில் பாங்காங் திசோ பற்றி பேசுவதை சீனா மறைமுகமாக மறுத்தது. ஆனால் நேற்று மொத்தமாக பாங்காங் திசோ பிரச்சனை குறித்து பேச முடியாது என்று சீனா கூறியுள்ளது. இதனால் பாங்காங் திசோவில் இருந்து படைகளை வாபஸ் வாங்கும் எண்ணத்தில் சீனா இல்லை என்று கூறுகிறார்கள்.

    கூறியது என்ன

    கூறியது என்ன

    அதேபோல் டெப்சாங் பகுதியில் சீனா தனது ஆக்கிரமிப்பு இடங்களில் இருந்து வெளியேறவும் மறுத்துவிட்டது. அங்கு ரோந்து பணிகளை மேற்கொள்ளவோம் என்று சீனா கூறியுள்ளது. முன்னதாக எல்லையில் பெரிய அளவில் படைகளை வாபஸ் வாங்கிவிட்டோம் என்று சீனாவின் வெளியுறவுத்துறை கூறியது. இந்த நிலையில் பாங்காங் திசோ குறித்து சீனா பேச மறுத்துள்ளது. இதனால் எல்லையில் சீனா மேலும் படைகளை வாபஸ் வாங்க வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+