உடனே விசாரியுங்கள்.. நீங்கள்தான் முழு பொறுப்பு.. லடாக்கில் விடாமல் உரசும் சீனா.. புதிய குற்றச்சாட்டு
லடாக்: கல்வான் பகுதியில் நடந்த மோதலுக்கு இந்தியாதான் காரணம், இந்தியா தனது வீரர்களை கட்டுப்பாட்டுடன் வைக்க வேண்டும், என்று இந்தியாவிற்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
Recommended Video
இந்தியா சீனா இடையே இப்போதுதான் எல்லையில் கொஞ்சம் அமைதி திரும்ப தொடங்கி உள்ளது. லடாக்கில் உள்ள கல்வான் பகுதியில் கடந்த மாதம் இந்தியா - சீனா இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.
இந்த நிலையில் அதன்பின் ஜூலை 6ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில் இரண்டு நாடுகளும் எல்லையில் இருந்து படைகளை வாபஸ் வாங்க ஒப்புக்கொண்டது. 2 கிமீ தூரத்திற்கு எல்லையில் படைகளை வாபஸ் வாங்க இரண்டு நாடுகளும் ஒப்புக்கொண்டது.

ஆனால் என்ன
ஆனால் லடாக்கில் பாங்காங் திசோ மற்றும் ஹாட்ஸ்பிரிங்ஸ் ஆகிய பகுதிகளில் இன்னும் சீனாவின் படைகள் உள்ளது. எல்லையில் படைகளை வாபஸ் வாங்குவதாக கூறிய சீனா இன்னும் படைகளை வாபஸ் வாங்கவில்லை.இதனால அந்த இடங்களில் மட்டும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் எல்லையில் முழு கவனத்துடன் இந்திய ராணுவம் செயல்பட்டு வருகிறது.

என்ன சொல்கிறது
இந்த நிலையில் கல்வான் பகுதியில் நடந்த மோதலுக்கு இந்தியாதான் காரணம், இந்தியா தனது வீரர்களை கட்டுப்பாட்டுடன் வைக்க வேண்டும், என்று இந்தியாவிற்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தியாவிற்கான சீன தூதர் சன் வெயிடங் எழுதி உள்ள கட்டுரையில், எல்லையில் நடக்கும் விஷயங்களை சீனா கூர்மையாக கவனித்து வருகிறது. உலக நாடுகள் கூர்மையாக பார்த்து வருகிறது.

இந்தியாதான்
இந்த மோதலை சரியாக கவனித்தால் ஒரு விஷயம் புலப்படும். கல்வான் மோதலுக்கு முழு பொறுப்பு இந்தியாதான். இந்தியாதான் எல்லையை மீறி சீனாவிற்குள் வந்தது. சீன வீரர்களை தாக்கியது. இந்திய வீரர்கள்தான் மோதலை தூண்டியது. எல்லை ஒப்பந்தத்தை இந்தியாதான் மீறியது.

இந்திய வீரர்கள்
இந்திய வீரர்கள்தான் எல்லையை கடந்து சீனாவிற்குள் வந்தனர். சர்வதேச விதிகளை அவர்கள் மீறியுள்ளனர். இந்தியா இதை உடனே விசாரிக்க வேண்டும். இந்தியா முழுமையான விசாரணையை தங்கள் நாட்டு வீரர்களுக்கு எதிராக செய்ய வேண்டும். எல்லை பிரச்னைக்கு இந்தியா முழுமையான பொறுப்பு ஏற்க வேண்டும்.

வேண்டும்
எல்லையில் மோதலுக்கு காரணமான வீரர்களை இந்தியா தண்டிக்க வேண்டும். அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் இதுபோல் எல்லையில் அத்துமீறும் வகையில் இந்தியா செயல்பட கூடாது. இதுபோல் இனி நடக்காது என்று இந்தியா கண்டிப்பாக உறுதி அளிக்க வேண்டும். எல்லா உறவிலும் ஏற்ற இறக்கம் இருக்கும். ஆனால் அதற்காக இந்தியா அத்துமீற கூடாது, என்று சீன தூதரே காட்டமாக தெரிவித்துள்ளார்.
-
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி












Click it and Unblock the Notifications