விமானபடைக்கு வந்த "அந்த" தகவல்.. அதிரடியாக ஜெட்களை அனுப்பிய இந்தியா.. லடாக்கில் இரவு என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

லடாக்: லடாக் எல்லையில் இருக்கும் கல்வான் பகுதியில் இந்தியாவின் விமானப்படை விமானங்கள் தீவிரமாக ரோந்து பணிகளை செய்து வருகிறது.

Recommended Video

    எல்லையில் பறந்த போர் விமானங்கள்.... Ladakh-ல் இரவு நடந்தது என்ன?

    லடாக் எல்லையில் இந்தியா - சீனா மோதலை தொடர்ந்து தீவிரமான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. ஆனால் இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகள் எதுவும் வெற்றிபெறவில்லை. சரியான முடிவு எட்டப்படவில்லை.

    இன்னொரு பக்கம் லடாக்கில் தொடர்ந்த சீனா படைகளை குவித்து வருகிறது. அதிலும் கல்வான் பகுதி மீது சீனா தீவிரமாக கவனம் செலுத்தி, அங்கு அதிக அளவில் படைகளை குவித்து வருகிறது.

    என்ன தகவல்

    என்ன தகவல்

    இந்த நிலையில்தான் இந்திய ராணுவத்திற்கு சீனாவின் துருப்புகள் குறித்த தகவல் வந்துள்ளது. அதன்படி சீனாவை சேர்ந்த வீரர்கள் மீண்டும் கல்வான் பகுதியில் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். சண்டை நடந்த அதே இடத்தில் சீனாவின் வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். அங்கு டென்ட்கள், சுரங்கங்கள் அதிகமாக அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு பதற்றம் அதிகரித்து உள்ளது.

    சீனாவின் விமானப்படை

    சீனாவின் விமானப்படை

    அதேபோல் எல்லையில் சீனாவின் போர் விமானங்கள் குவிக்கப்பட்டுள்ளது. கல்வான் பகுதிக்கு மிக அருகில் சீனா தனது படைகளை குவித்து உள்ளது. அங்கு எல்லைக்கு அருகே சீனாவின் போர் விமானங்கள் ரோந்து பணிகளை செய்து வருகிறது என்றும் கூறுகிறீர்கள். கடந்த ஒரு வாரமாகவே சீனாவின் போர் விமானங்கள் எல்லைக்கு அருகே ரோந்து பணிகளை தீவிரமாக செய்து வருகிறது.

    இந்தியாவும் களமிறங்கியது

    இந்தியாவும் களமிறங்கியது

    இந்த நிலையில் இந்தியாவின் போர் ஜெட் விமானங்கள் நேற்று இரவில் இருந்து இன்று அதிகாலை வரை எல்லையில் மிக தீவிரமாக சோதனை நடத்தியது. லடாக்கில் லே பகுதியில் இருக்கும் விமானப்படை தளத்தில் இருந்து விமானங்கள் நேற்று எல்லைக்கு கொண்டு செல்லப்பட்டது. சுமார் 250 கிமீ தூரம் பயணம் செய்து இந்த விமானங்கள் கல்வான் பகுதிக்கு சென்றது.

    கல்வான் பகுதி

    கல்வான் பகுதி

    அதன்பின் கல்வான் பகுதியில் 6 மணி நேரத்திற்கும் மேலாக இந்திய போர் விமானங்கள் ரோந்து பணிகளை மேற்கொண்டது . இந்தியாவும் மிக் ரக விமானங்களை இதற்காக பயன்படுத்தி இருக்கிறார்கள். 6 போர் விமானங்கள் சென்று எல்லையில் இப்படி ரோந்து பணிகளை மேற்கொண்டதாக தகவல்கள் வருகிறது. சீனாவின் போர் விமானங்கள் கல்வான் பகுதியில் இருக்கிறதா என்றும் சோதனைகளை செய்துள்ளனர்.

    இரவு முழுக்க

    இரவு முழுக்க

    முக்கியமாக கல்வானில் சீனாவின் படைகள் எங்கே இருக்கிறது என்பதை இந்த ரோந்து மூலம் இந்திய படைகள் கண்டுபிடித்து உள்ளதாக கூறுகிறார்கள். தற்போது வெளியாகி உள்ள சாட்டிலைட் படங்களும் இதை உறுதி செய்துள்ளது . நேற்று இரவு தீவிரம் அடைந்த இந்த ரோந்து பணிகள் இனி வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள். இதனால் எல்லையில் உடனே அமைதி திரும்ப வாய்ப்பில்லை என்றும் கூறுகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+