For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீனா வருவதற்கு சில நிமிடங்கள் முன்.. துரிதமாக சென்று மலைகளை கைப்பற்றிய இந்தியா.. ஆரம்பமே அதிரடி!

Google Oneindia Tamil News

லடாக்: லடாக்கில் இருக்கும் உயரிய மலைகளில் பல இடங்களில் இந்திய ராணுவம் தனது படைகளை குவித்து உள்ளது. சீனாவிற்கு எளிதாக பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா தனது படைகளை எல்லையில் குவித்து உள்ளது.

Recommended Video

    India China standoff: Cameraவில் சிக்காமல் லடாக் மலையை பிடித்த India | OneIndia Tamil

    லடாக்கில் இந்தியா - சீனா இடையில் தற்போது மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்டு ராணுவமும் தற்போது எல்லையில் படைகளை குவிக்க தொடங்கி உள்ளது. சீனா தற்போது லடாக்கில் உயரம் குறைவான பகுதிகளில் படைகளை குவித்து வருகிறது.

    முக்கியமாக பாங்காங் திசோ போன்ற நதிகளுக்கு அருகே இருக்கும் பகுதிகளில் சீனா தனது படைகளை குவித்து வருகிறது. ஆனால் இந்தியாவோ உயரமான மலை பகுதிகளில் படைகளை குவித்து வருகிறது.

    இந்தியாதான் லடாக்கில் அத்துமீறுகிறது.. விரைவில் உரிய நடவடிக்கை எடுப்போம்.. சீனா பாய்ச்சல்! இந்தியாதான் லடாக்கில் அத்துமீறுகிறது.. விரைவில் உரிய நடவடிக்கை எடுப்போம்.. சீனா பாய்ச்சல்!

    எங்கு படைகள்

    எங்கு படைகள்

    லடாக்கில் பாங்காங் திசோ அருகே இருக்கும் முக்கியமான இடங்களில் இந்தியா படைகளை குவித்து உள்ளது. அதேபோல் செசூல் செக்டார் அருகே இருக்கும் மலை பகுதிகளில் இந்தியா படைகளை களமிறக்கி இருக்கிறது. மேலும் ரெஸ்சாங் லா பகுதியில் இந்தியா படைகளை குவித்து வருகிறது. இதற்கான சிறப்பு வீரர்களை இந்தியா அனுப்பி வருகிறது.

    வேறு எங்கு

    வேறு எங்கு

    லே பகுதியிலும் டெப்சாங் பகுதியிலும் இந்தியா படைகளை களமிறக்கி உள்ளது. பொதுவாக போரின் போது மலை பகுதியில் படைகளை குவிப்பது சிறப்பான வியூகமாக பார்க்கப்படுகிறது. மலைகளில் படைகளை குவிப்பதன் மூலம் போர் அல்லது மோதல் வந்தால் எளிதாக தாக்குதல் நடத்த முடியும். ஸ்னைபர்களை களமிறக்கி எளிதாக தாக்குதல்களை இதனால் நடத்த முடியும்.

    இந்தியாவிற்கு மலைகள் பாதுகாப்பு

    இந்தியாவிற்கு மலைகள் பாதுகாப்பு

    லடாக்கில் இருக்கும் மலைகளில் தற்போது இந்தியாவே அதிக படைகளை குவித்து, வலிமையாக இருக்கிறது. இந்த மலை பகுதிகளை இரண்டு நாடுகளும் உரிமை கோரி வருகிறது. ஆனால் சீனாவிற்கு முன்னதாக இந்தியா இங்கு படைகளை அனுப்பி உள்ளது. சீனாவின் முன்பாக வேகமாக செயல்பட்டு இங்கு படைகளை அனுப்பி மலைகளை கைப்பற்றி உள்ளது.

    செம வாய்ப்பு

    செம வாய்ப்பு

    அதிலும் இங்கிருந்து வெறும் 100 மீட்டர் தூரத்தில்தான் சீனாவின் படைகள் குவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் படைகள் வருவதற்கு முன்பாக அங்கு இந்தியா வந்து படைகளை குவித்துள்ளது. ஆனால் இந்த சம்பவத்தின் போது கைகலப்போ, மோதலோ ஏற்படவில்லை. இப்படி மலையில் படைகளை குவிப்பது, போர் வரும் பட்சத்தில் இந்தியாவிற்கு இது கூடுதல் பலம் அளிக்கும் என்பது கூடுதல் சிறப்பு.

    ஸ்பெஷல் படை

    ஸ்பெஷல் படை

    இதற்காக லடாக் அருகே தற்போது இந்தியா தனது ஸ்பெஷல் மலை பாதுகாப்ப்பு படை எனப்படும் "Special Mountain Force" படையை களமிறக்கி உள்ளது. இமயமலை தொடர், கே 2 சிகரத்தில் சீனா செய்யும் ஆக்கிரமிப்புகளை தடுக்கும் வகையில் இந்த படைகள் களமிறக்கப்பட்டுள்ளது. இந்த படை பிரிவு பல வருடங்களாக மலை பகுதிகளில் தாக்குதல் நடத்துவதற்காக சிறப்பு பயிற்சி பெற்று படை பிரிவு ஆகும். 10 வருடங்களாக மலைகளில் இவர்கள் சிறப்பு பயிற்சிகளை பெற்று இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    China standoff with India: India takes upper hand in mountain heights against PLA.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X