சீனாவுடன் இந்திய மேஜர் ஜெனரல் தீவிர ஆலோசனை.. தோல்வியில் முடிந்த முதல் சுற்று பேச்சு.. பதற்றம்!

Subscribe to Oneindia Tamil

லடாக்: இந்தியா - சீனா இடையிலான லடாக் மோதல் தொடர்பாக இன்று முக்கியமான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் முதல் சுற்று தற்போது தோல்வியில் முடிந்துள்ளது. இரண்டு நாட்டு பிரச்சனையை தீர்க்கும் வகையில் இன்று பேச்சுவார்த்தை நடக்கிறது.

இந்தியா சீனா இடையிலான எல்லை பிரச்சனை மிக தீவிரமாக சென்று கொண்டு இருக்கிறது . ஒரு மாதத்திற்கும் மேலாக எல்லையில் இரண்டு நாடுகளுக்கு இடையில் மோதல் நிலவி வருகிறது. மே 5ம் தேதி லடாக்கிலும், சிக்கிமில் சீனா அத்துமீறியது.

அப்போது தொடங்கிய சண்டை இப்போதும் நீடித்து வருகிறது. இது தொடர்பாக இரண்டு நாட்டு ராணுவ வீரர்களும் 20க்கும் அதிகமான பேச்சுவார்த்தைகளை நடத்தி உள்ளனர்.

தோல்வி

தோல்வி

இரண்டு நாட்டு ராணுவ படையின் லோவர் லெவல் ரேங்க் கொண்ட வீரர்கள், அதேபோல் லோக்கல் அதிகாரிகள், மேஜர் ஜெனரல்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்து இருக்கிறது. இந்த பேச்சுவார்த்தை எல்லாமும் தோல்வியில் முடிந்தது. லடாக்கில் இருக்கும் கல்வான் பகுதியை சீனா தொடர்ந்து கேட்டு வருவதால் இந்த பேச்சுவார்த்தை எல்லாம் தோல்வியில் முடிந்தது. அதன்பின் கடந்த 6ம் தேதி முக்கியமான பேச்சுவார்த்தை எல்லையில் நடந்தது.

எல்லை பேச்சுவார்த்தை

எல்லை பேச்சுவார்த்தை

இரண்டு நாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே சீனாவின் ஷுசுல் மோல்டோ பகுதியில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்தியாவின் ராணுவப் படையின் 14வது படைப்பிரிவின் லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் எல்லைக்கு சென்று இந்த பேச்சுவார்த்தையை நடத்தினார். சீனா சார்பாக சீனாவின் மேஜர் ஜெனரல் லியு லின் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் இரண்டு நாட்டு ராணுவமும் எல்லையில் படைகளை வாபஸ் பெற்று, ஏப்ரல் மாதத்தில் இருந்த நிலைக்கு திரும்ப வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது .

ஆனால் சீனா எப்படி

ஆனால் சீனா எப்படி

ஆனால் சீனா இந்த கோரிக்கையை ஏற்கவில்லை என்கிறார்கள். சீனா இந்த ஆலோசனையில் கல்வான் பகுதியை கேட்டு உரிமை கொண்டாடியது என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்துதான் இரண்டு நாட்கள் முன் கல்வான் பகுதியில் இரண்டு நாட்டு ராணுவத்திற்கு எதிராக சண்டை நடந்தது. அங்கு இரண்டு நாட்கள் முன் நடந்த சண்டையில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதல் நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

என்ன ஏமாற்றம்

என்ன ஏமாற்றம்

கல்வான் பகுதியில் இருந்து சீனா வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கு சீனா அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்தியா - சீனா இடையிலான லடாக் மோதல் தொடர்பாக இன்று முக்கியமான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் முதல் சுற்று தற்போது தோல்வியில் முடிந்துள்ளது. இரண்டு நாட்டு பிரச்சனையை தீர்க்கும் வகையில் இன்று பேச்சுவார்த்தை நடக்கிறது.

என்ன சந்தேகம்

என்ன சந்தேகம்

இந்த இரண்டு நாட்டு பிரச்சனை என்பது பேசி தீர்க்க கூடிய நிலைமையில் இல்லை. பேச்சுவார்த்தைகள் வரிசையாக தோல்வியில் முடிந்துள்ளது. நேற்று இரண்டு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையிலான பேச்சுவார்த்தை கூட அத்தனை சிறப்பாக அமையவில்லை. இதனால் இன்று நடக்கும் பேச்சுவார்த்தையில் முக்கிய திருப்பம் வர வாய்ப்புள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+