சீனாவின் நரி தந்திரம்.. லடாக்கில் அந்த ஒரு இடத்திற்கு மீண்டும் குறி வைத்த பிஎல்ஏ.. அம்பலமான திட்டம்!

Subscribe to Oneindia Tamil

லடாக்: லடாக்கில் கல்வான் பகுதியில் சீனா முதலில் தாக்கிய நிலையில் தற்போது பாங்காங் திசோ பகுதி மீது சீனா கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. சீனா தற்போது அங்கு படைகளை குவித்து வருகிறது.

இந்தியா சீனா இடையே லடாக்கில் மிக மோசமான எல்லை பிரச்சனை நிலவி வருகிறது. லடாக்கில் இருக்கும் கல்வான் நதி, ஹாட் ஸ்பிரிங்ஸ் நதி, பாங்காங் திசா நதி ஆகிய நதிகள்தான் தற்போது பதற்றத்திற்கு உள்ளாகி உள்ளது.

வரிசையாக அடுத்தடுத்து இருக்கும் இந்த மூன்று இடங்களில் சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது. அங்குதான் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. இதில் கல்வான் பகுதியில்தான் மிக மோசமான மோதல் ஏற்பட்டது.

கல்வான் பகுதியில் சண்டை

கல்வான் பகுதியில் சண்டை

கடந்த 15 மற்றும் 16ம் தேதிகளில் லடாக்கில் இருக்கும் கல்வான் பகுதியில் இரண்டு நாட்டு ராணுவத்திற்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். கல்வானில் இருக்கும் கட்டுப்பாட்டு பகுதி 14ல் இந்த சண்டை நடந்தது. இந்த சண்டை இந்தியாவிற்கு கீழ் வரும் பகுதியாகும். இதனால் அங்கு நிலைமை மோசம் அடைந்துள்ளது.

பாங்காங் திசா எப்படி

பாங்காங் திசா எப்படி

கல்வான் பகுதியில் நிலைமை இப்படி மோசமாகி வரும் நிலையில் இன்னொரு பக்கம் பாங்காங் திசா பகுதி மீது சீனா கவனம் செலுத்தி வருகிறது. பாங்காங் திசா பகுதி என்பது இந்தியாவிற்கு நுழைவு வாயில் போல இருக்கும் பகுதி ஆகும். லடாக்கில் கல்வான் பகுதியில் இருந்து ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதிக்கு சென்று பின் அங்கிருந்து எல்லையில் பாங்காங் திசா பகுதிக்கு செல்ல முடியும்.

சீனாவின் கவனம்

சீனாவின் கவனம்

இத்தனை நாட்கள் பாங்காங் திசா பகுதி மீது மட்டுமே சீனா கவனம் செலுத்தி வந்தது. ஆம் கல்வான் பகுதியில் சீனா உரிமை கோருவதும், அத்துமீறுவதும் புதிய விஷயம் ஆகும். பாங்காங் திசா பகுதியில் சீனா பாரம்பரியமாக அத்துமீறல்களை நிகழ்த்தி வருகிறது. பாங்காங் திசா பகுதியில் fingers எனப்படும் 8 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளது. இதில் 4 இந்தியாவின் கட்டுப்பாட்டிலும், 4 சீனாவின் கட்டுப்பாட்டிலும் உள்ளது.

சீனா அத்துமீறல்

சீனா அத்துமீறல்

இந்த நிலையில் இந்தியாவிற்கு கீழ் வரும் 4வது கட்டுப்பாட்டு பகுதியில் சீனா கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. அதாவது அங்கு சீனா ஏற்கனவே அத்துமீறலை நிகழ்த்தி விட்டது.இந்தியாவிற்கு கீழ் வரும் 4வது கட்டுப்பகுதியை ஆக்கிரமித்ததோடு, 5, 6, 7, 8 ஆகிய நான்கு கட்டுப்பாட்டு பகுதிகளை இணைத்து சீனா கட்டுமான பணிகளை மேற்கொண்டுவருகிறது. அங்கு நிரந்தர கட்டுமானங்களை சீனா செய்து வருகிறது.

நிரந்தர கட்டுமானம்

நிரந்தர கட்டுமானம்

ஆம், டென்டுகள் அமைக்காமல் மொத்தமாக அங்கு சீனா நிரந்தரமாக கட்டுமானங்களை அமைத்து வருகிறது. இந்தியாவிற்கு அருகே எல்லையில் உள்ள கட்டுப்பாட்டு பகுதி 5ல்தான் அதிகமான கட்டுமானங்களை சீனா நிகழ்த்தி உள்ளது. ஒரு பக்கம் கல்வானில் தாக்கிவிட்டு இன்னொரு பக்கம் பாங்காங் திசோவில் சீனா இப்படி செய்கிறது. இந்த அனைத்து பணிகளையும் சீனா வெறும் ஒரே மாதத்தில் செய்து இருக்கிறது. இங்கு உயர்ந்த மலை பகுதிகளில் சீனா கட்டுமானங்களை செய்து வருகிறது.

Recommended Video

    தவறு முழுக்க India பக்கம் தான்... இந்தியாவை சீண்டும் China
    சீனாவிற்கு சாதகம்

    சீனாவிற்கு சாதகம்

    உயர்ந்த இடத்தில் இப்படி சீனா கட்டுமான பணிகளை மேற்கொள்வது சீனாவிற்கு சாதகமாக முடியும். அந்த மொத்த இடத்திலும் சீனா தனது ஆதிக்கத்தை வெளிக்காட்ட முடியும். அங்கு சீனா தொடர்ந்து பங்கர்களையும் அமைத்து வருகிறது. இதனால் பாங்காங் திசா பகுதியில் சீனா ஏதாவது நாச வேலையில் ஈடுபடலாம் என்று கூறுகிறார்கள். இந்த கட்டுமான பணிகள் காரணமாக இந்தியாவால் அங்கு ரோந்து பணிகளை செய்ய முடியவில்லை.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+