முக்கிய முன்னேற்றம்.. லடாக் பேச்சுவார்த்தையில் இறங்கி வரும் சீனா.. எல்லையில் நடக்கும் சின்ன மாற்றம்!
லடாக்: இந்தியா - சீனா ராணுவ அதிகாரிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும், முக்கியமான இடங்களில் இருந்து சீனா தனது படைகளை வாபஸ் வாங்கிக் கொள்ள தயாராக இருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.
இந்தியா சீனா இடையே லடாக் எல்லையில் கல்வான் பகுதியில் நடந்த சண்டைக்கு பின் உறவு மோசமாகிக் கொண்டே வருகிறது. தொடர்ந்து எல்லையில் சீன ராணுவம் படைகளை குவித்து வருகிறது.அங்கு அமைதி திரும்புவதற்கான எந்த விதமான அறிகுறியும் தெரியவில்லை.
இதுவரை 20க்கும் அதிகமான முறை இரண்டு நாட்டு ராணுவ வீரர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.ஆனால் எந்த பேச்சுவார்த்தையில் சரியான தீர்வு எட்டப்படவில்லை.

என்ன தீர்வு
இந்த நிலையில் இந்தியா - சீனா ராணுவ அதிகாரிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும், முக்கியமான இடங்களில் இருந்து சீனா தனது படைகளை வாபஸ் வாங்கிக் கொள்ள தயாராக இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். நேற்று மாலையில் இருந்து இந்த பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்தியாவின் லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் மற்றும் சீனாவின் மேஜர் ஜெனரல் லியு லின் ஆகியோர் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

நீண்ட நேரம்
இந்த பேச்சுவார்த்தை 18 மணி நேரத்தை தாண்டி சென்றது. இந்த நிலையில் லடாக் எல்லையில் கல்வான் பகுதியில் குறிப்பிட்ட சில இடங்களில் இருந்து படைகளை வாபஸ் வாங்க இரண்டு தரப்பும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. கல்வானில் பிரச்சனையாக இருக்கும் மூன்று கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து படைகளை வாபஸ் வாங்க இரண்டு தரப்பும் ஒப்புக்கொண்டது என்கிறார்கள்.

எந்த இடம்
அதன்படி கல்வானில் இருக்கும் கட்டுப்பாட்டு பகுதிகளை 14, 15, 17 ஆகிய பகுதிகளில் இருந்து இரண்டு தரப்பும் படைகளை திரும்ப பெற ஒப்புக்கொண்டுள்ளது. இந்த பகுதிகள் கல்வானில் இருந்து ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதிகள் வர நீண்டு உள்ளது. இந்த பகுதிகள் இந்தியாவிற்கு கீழ் வரும் இடங்கள் ஆகும். இதில் கட்டுப்பாட்டு பகுதி 14ல் தான் கடந்த மாதம் பெரிய சண்டை வந்து 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

வேறு எங்கு
இதில் கட்டுப்பாட்டு பகுதி 16ல் எந்த விதமான பிரச்சனையும் இல்லை. அந்த பகுதி முழுக்க முழுக்க இந்தியாவிற்கு கீழ் வரும் இடம் ஆகும். ஆனால் அதே சமயம் பாங்காங் திசோ பகுதியில் இருந்து படைகளை வாபஸ் வாங்க சீனா மறுத்துவிட்டது என்று கூறுகிறார்கள். அங்கு இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள 4 பகுதிகளில் 2 பகுதிகளை (பிங்கர்கள் 3 மற்றும் 4) ஆகிய பகுதிகளை சீனா உரிமை கொண்டாடுகிறது.

சீனா உரிமை
அந்த பகுதிகளில் இருந்து சீனா வெளியேற மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனால் பேச்சுவார்த்தையில் கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டாலும் முழுமையாக இதனால் அமைதி திரும்பாது என்று கூறுகிறார்கள். இந்த பேச்சுவார்த்தை நல்லபடியாக முடிந்து இருப்பதாகவும், முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது. இந்தியா இது தொடர்பாக இன்னும் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா












Click it and Unblock the Notifications