கல்வான் கொடூரம்.. அடையாளமே தெரியவில்லை.. சிதைக்கப்பட்ட வீரர்களின் உடல்கள்.. இந்திய ராணுவம் கொதிப்பு
லடாக்கில் பலியான வீரர்களின் உடல்கள் அடையாளமே தெரியாத அளவிற்கு மிக மோசமாக சிதைக்கப்பட்டு இருந்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
லடாக்: லடாக்கில் பலியான வீரர்களின் உடல்கள் அடையாளமே தெரியாத அளவிற்கு மிக மோசமாக சிதைக்கப்பட்டு இருந்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
Recommended Video
45 வருடமாக லடாக்கில் சீனா - இந்தியா ராணுவம் இடையே சிறு சிறு சண்டை மட்டுமே நிலவி வந்தது. உயிர் பலி ஏற்படும் அளவிற்கு எங்கும் சண்டை ஏற்படவில்லை. ஒரு துப்பாக்கி குண்டு கூட சுடப்படவில்லை.
ஆனால் கடந்த 15 மற்றும் 16ம் தேதிகளில் லடாக்கில் இருக்கும் கல்வான் பகுதியில் இரண்டு நாட்டு ராணுவத்திற்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.

எங்கே நடந்தது
லடாக்கில் இருக்கும் கல்வான் பகுதியில்தான் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அங்கு இருக்கும் கட்டுப்பாட்டு பகுதி 14ல் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அங்கு நதிக்கு அருகே சீனா அமைத்த முறைகேடான முகாம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்த வீரர்கள் 100 பேர் வரை சென்று இருந்தனர். அப்போது சீன வீரர்கள் இந்திய வீரர்களை திட்டமிட்டு தாக்கினார்கள்.

மிக மோசமான தாக்குதல்
மிக மோசமான ஆயுதங்களை கொண்டு இந்திய வீரர்களை சீன வீரர்கள் தாக்கினார்கள். முழுக்க முழுக்க கம்பிகள், குச்சிகள், இரும்பு ராடுகள், கற்களை வைத்து தாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். கட்டிடம் கட்டும் இரும்பு கம்பியில் முற்களை வைத்து வெல்டிங் செய்து இருக்கிறார்கள். கூரான முற்கள் போல இந்த ஆயுதங்களை உருவாக்கி உள்ளனர். இதை வைத்து தாக்குதல் நடத்தி உள்ளனர்.

அடையாளம் தெரியவில்லை
இந்த தாக்குதலில் பலியான 20 வீரர்களின் சிலரின் முகங்கள் சிதைக்கப்பட்டு இருக்கிறது. சிலரின் கன்னங்கள் கிழிக்கப்பட்டுள்ளது. பலரின் முகம் அடையாளமே காண முடியாத அளவிற்கு சிதைக்கப்பட்டு உள்ளது. இந்திய ராணுவ வீரர்கள் 77 பேர் இதில் மோசமாக காயம் அடைந்தனர். இவர்களுக்கு இன்னும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் உடல்நிலை இன்னும் சரியாகவில்லை.

கொதிப்பில் ராணுவம்
இந்திய வீரர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டதை பார்த்து இந்திய ராணுவம் கடும் கோபத்தில் இருக்கிறது. வீரர்களை அவர்கள் கொடூரமாக தாக்கி இருக்கிறார்கள். இது திட்டமிட்டு செய்யப்பட்ட தாக்குதல். இதை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று இந்திய ராணுவ தரப்பு கடும் கொதிப்பில் இருக்கிறது. சீனாவிற்கு தக்க பாடம் புகட்ட தயாராக இருக்கிறார்கள்.

பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை
இந்த நிலையில் இந்தியா - சீனா இடையிலான லடாக் மோதல் தொடர்பாக நேற்று முக்கியமான பேச்சுவார்த்தை நடந்தது. இரண்டு நாட்டு பிரச்சனையை தீர்க்கும் வகையில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. இரண்டு நாட்டு மேஜர் ஜெனரல்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இதில் ஆக்கபூர்வமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இதனால் அங்கு பதற்றம் அதிகரித்து வருகிறது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications