குடியுரிமை சட்டம்.. என்ன நடந்தாலும் அனுமதிக்க மாட்டோம்.. முடிந்ததை பாருங்கள்.. மமதா சவால்!
குடியுரிமை சட்ட திருத்தத்தை என்ன நடந்தாலும் மேற்கு வங்கத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா: குடியுரிமை சட்ட திருத்தத்தை என்ன நடந்தாலும் மேற்கு வங்கத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதா பெரும் எதிர்ப்பலைகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் மசோதாவிற்கு எதிராக நாடு முழுக்க பல மாநில தலைவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்க தொடங்கி உள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் கடந்த மூன்று நாட்களாக மக்கள் இதற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். தற்போது மேற்கு வங்க முதல்வரும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

என்ன சொன்னார்
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, என்ன நடந்தாலும் எங்கள் மாநிலத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்தை அனுமதிக்க மாட்டோம். என்ஆர்சி சட்டத்தையும் எங்கள் மாநிலத்தில் அனுமதிக்க மட்டோம். வடகிழக்கு மாநிலங்களுடன் நாங்கள் இணைந்து செயல்படுவோம்.

காவி கட்சி
காவி கட்சி நினைத்ததை எல்லாம் செய்ய முடியாது. அவர்களால் எங்கள் மாநிலத்தை துண்டு போட முடியாது. அதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எங்களுக்கு மாநில நலன்தான் முக்கியம். பாராளுமன்றத்தில் இந்த சட்டம் நிறைவேறி இருக்கலாம்.

எங்கள் மாநிலம்
ஆனால் எங்கள் மாநிலத்திற்கு இதை அனுமதிக்க மாட்டோம். மேற்கு வங்கத்தில் இருக்கும் இஸ்லாமியர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். எங்கள் நாட்டில் மக்கள் எல்லோரும் பாதுகாப்பாக இருப்பார்கள். அதற்கு நான் உறுதி அளிக்கிறேன் .

திரிணாமுல்
இந்த சட்டத்திற்கு எதிராக திரிணாமுல் கட்சி போராட்டம் நடத்தும். வரும் 16-18 தேதிகளில் மாநிலம் முழுக்க நாங்கள் போராட்டம் நடத்துவோம். இன்னும் எத்தனை நாளைக்கு நீங்கள் இப்படி மக்களை பிரித்து மோசமாக ஆட்சி நடத்துவீர்கள், என்று மமதா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications