மோதல்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாதான் பொறுப்பு- பாஜக எம்பி நிஷிகாந்த் துபே பகீர்
டெல்லி: நாட்டின் தற்போதைய மக்களிடையேயான மோதல்களுக்கு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாதான் பொறுப்பு என்று பாஜக எம்பி நிஷிகாந்த் துபே பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் சட்டசபை மசோதாக்கள் மீத்உ ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதி முடிவெடுக்க காலக்கெடுவை நிர்ணயித்தது உச்சநீதிமன்றம். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

இதனையடுத்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் வக்பு சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததால், நாடாளுமன்ற கூட்டுக் குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தியது.
தற்போது பாஜக எம்பி நிஷிகாந்த் துபே உச்சநீதிமன்றத்தையும் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவையும் மிகவும் காட்டமாக விமர்சனம் செய்திருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை நியமிப்பதே ஜனாதிபதிதான். அப்படியான அதிகாரம் படைத்த ஜனாதிபதிக்கு எப்படி உச்சநீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்க முடியும்?
நாடாளுமன்றம் என்பது நாட்டின் சட்டங்களை நிறைவேற்றுகிற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அமைப்பு. ஆனால் நாடாளுமன்றத்துக்கே நீங்கள் கட்டளையிடுவீர்களா? அப்படியானால் புதிய சட்டங்கள் எப்படி கொண்டு வர முடியும்? நாட்டின் ஜனாதிபதி, மசோதாக்கள் மீது 3 மாதத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று எந்த சட்டம்தான் சொல்கிறதாம்? இத்தகைய தீர்ப்புகள், நாட்டை அசாதாரண நிலைக்கு கொண்டு போகிறது. அடுத்த முறை நாடாளுமன்றம் கூடும் போது இது பற்றி விவாதிக்கப்பட வேண்டும்.
நாட்டில் நடைபெறுகிறது, மக்களிடையேயான அனைத்துவிதமான மோதல்களுக்குமே உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாதான் பொறுப்பு. இவ்வாறு நிதிஷ்காந்த் துபே கூறினார்.
நிதிஷ்காந்த் துபேவுக்கு திமுக கண்டனம்
பாஜக எம்பியின் இந்த சர்ச்சைப் பேச்சுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், நிஷிகாந்த் துபே எம்பிக்கு எதுவுமே தெரியாது. உச்சநீதிமன்றம் என்பது நாட்டின் சட்டங்களைப் பாதுகாக்கின்றன ஒரு அமைப்பு. மத்தியில் ஆளும் அரசாங்கமானது தாங்கள் நினைத்தபடி அரசியல் சாசனத்தை மாற்ற முயற்சிக்கிறது. அனைத்துவிதமான சட்டங்களுக்கும் எதிராகவே பாஜக செயல்பட்டு வருகிறது. ஆகையால்தான் சட்டங்களுக்கு எதிராக பாஜக அரசு செயல்படக் கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்துகிறது என்றார்.
சிபிஐ கடும் எதிர்ப்பு
சிபிஐ கட்சியின் கேரளா மாநில செயலாளர் பினோய் விஸ்வம் கூறுகையில், பாஜக எம்பி நிஷிகாந்த் துபேயின் விமர்சனம் என்பது நாட்டின் நீதித்துறை மீதான கொடூரமான தாக்குதல். நாட்டின் அரசியல் சாசனத்துக்கு எதிரான செயல். நாட்டில் நடைபெறும் மத ரீதியான மோதல்களுக்கு பாஜகவும் ஆர்.எஸ்.எஸ். இயக்கமும்தான் காரணம் என்றார்.
காங்கிரஸ் கண்டனம்
மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் ஹூசைன் தல்வால் கூறுகையில், நாட்டின் நீதித்துறைக்கு எதிரானது நிஷிகாந்த் துபேயின் விமர்சனம். நமது நாட்டின் துணை ஜனாதிபதியே நீதித்துறையை விமர்ச்கிறார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு நீதித்துறையை விமர்சிக்கக் கூடாது. இவை எல்லாம் பாஜகவினர் அரசியல் சாசனத்தை மதிக்காமல் மீறி நடப்பதையே வெளிப்படுத்துகிறது என்றார்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications