முகமெல்லாம் ரத்தம்.. வெறி ஏற்றிய கேரளா ஸ்டோரி! ஜம்மு காஷ்மீர் மருத்துவக்கல்லூரி மாணவர்களிடையே மோதல்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் தாக்கத்தால் இரு தரப்பு மாணவர்களிடையே வெடித்த மோதலில் 5 மாணவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
சுதிப்தோ சென் இயக்கத்தில் அடா சர்மா, சித்தி இத்னானி, பிரணவ் மிஸ்ரா நடிப்பில் தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் கடந்த 5 ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் பெண்கள் இஸ்லாமியர்களாக மதம் மாற்றப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளில் சேர்க்கப்பட்டு உள்ளதாக திரைக்கதை எழுதப்பட்டு இருக்கிறது.

அடிப்படை ஆதாரங்கள் இன்றி இந்த படம் எடுக்கப்பட்டதாக கூறி இப்படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் உட்பட பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின. நீதிமன்ற வழக்குகளை தாண்டி பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
தமிழ்நாட்டில் இந்த படத்திற்கு கிடைத்த மோசமான விமர்சனங்கள், பார்வையாளர் வருகை குறைவு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை காரணம் காட்டி 2 வது நாளில் இருந்து இப்படம் திரையிடப்படாது என்று மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அறிவித்தன. அதன் தொடர்ச்சியாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் இப்படத்துக்கு தடை விதித்தார்.
அதே சமயம் பிற மாநிலங்கள் இப்படம் திரையரங்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படம் வெளியானால் மதவெறுப்பு அதிகரிக்கும் என்றும், மதவாத மோதல்கள் வெடிக்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டது. இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்த மனுதாரர்களும் இதே அச்சத்தை பதிவு செய்தனர். தற்போது அது ஜம்மு காஷ்மீரில் உண்மையாகி இருக்கிறது.
அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் காரணமாக பயங்கர மோதல் வெடித்து இருக்கிறது. மருத்துவக் கல்லூரியில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அதிகாரப்பூர்வ வாட்ஸ் அப் குழுமத்தில் தீபக் என்ற மாணவர் இந்த படத்தின் லிங்கை பகிர்ந்து, 'விழித்து இருப்பவர்கள் பார்க்க வேண்டிய படம்.' என்று தெரிவித்தார்.
இதற்கு ஆகிப் இஷாக் என்ற மாணவர் ஆட்சேபனை தெரிவித்து இருக்கிறார். எதிர்மறை கருத்துக்களை பகிர்வதை தவிர்க்குமாறு அவர் கூறியுள்ளார். ஆனால், அந்த லிங்கை தீபக் நீக்காத நிலையில், இதுபோன்ற பதிவுகளை பகிர்வதாக இருந்தால் தனியாக வாட்ஸ் அப் குழுவை தொடங்கிக்கொள்ளுமாறு ஆகிப் கூறி உள்ளார். மேலும் சில மாணவர்களும் தி கேரளா ஸ்டோரி படத்தின் லிங்கை பகிர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், தீபக் தனது நண்பர்கள் மற்றும் கல்லூரி சீனியர்களுடன் சென்றுகொண்டு இருந்தபோது, வாட்ஸ் அப் குழுவில் கேரளா ஸ்டோரி படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆரிப் குல் என்ற முதலாமாண்டு மாணவரை தடுத்து நிறுத்தி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனை கண்டு ஆரிபுக்கு ஆதரவாக மேலும் சில மாணவர்கள் அங்கு திரண்டனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கல்லூரி வளாகத்திலேயே மோதல் வெடித்தது. அப்போது கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி வெளி நபர்களும் உள்ளே புகுந்து தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த மோதலில் இறுதியாண்டு மாணவர் ஹசீப் என்பவரின் தலை இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதில் அவரது மண்டை உடைந்து படுகாயம் அடைந்துள்ளார். முகம் முழுவதும் ரத்தமாக இருக்கும் அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அதேபோல் அருணேஷ், அன்கித், உமர், அக்ஷித் ஆகிய மாணவர்களும் இந்த மோதலில் லேசாக காயமடைந்து இருக்கிறார்கள். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இரு தரப்பு மாணவர்களும் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இது குறித்து தனியார் ஆங்கில ஊடகத்துக்கு பேட்டியளித்த அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர், தி காஷ்மீர் பைல்ஸ் படத்தின் லிங்கை பகிர்ந்த தீபக்கும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆகிப் இஷாகும் நெருங்கிய நண்பர்கள் என்றும், இந்த படத்தின் காரணமாகவே இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications